››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவத்தினரால் புதிய வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கான பணிப்பகம் நிர்மாணம்

[2018/04/12]

இராணுவத்துக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக பாதுகாப்பு செயலாளர் உறுதி

இராணுவம் தனது சுயநிர்ணயத்தை நிரூபித்துள்ளதுடன், எந்தவொரு விவரத்துனுக்கையும் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அது தாய்நாட்டிற்கும், முழு உலகிற்கும் மிகப்பெரிய சேவையை செய்துள்ளது. மேலும் இராணுவம் தைரியம், அறிவு மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. எனவே கொள்கை வகுப்பாளர்கள் எனும் வகையில் நாம் அதற்கு பூரண ஆதரவை வழங்குவோம் என பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்ன அவர்கள் தெரிவித்தார். கொழும்பில் உள்ள இலங்கை இராணுவத்தின் புதிய வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கான பணிப்பகத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் (ஏப்ரல், 12) கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இராணுவத்தின் முதலாவது வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கான பணிப்பகம், கொழும்பு 3, கொள்ளுப்பிட்டியில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலனித்துவ கால டச்சு கட்டிடத்தில் அமைந்துள்ளது. "சாம மெதுர" (சமாதான மாளிகை) என பெயர் கொண்ட இப் புதுப்பிக்கப்பட்ட பழைய கட்டிடம், முன்னர் தலைநகரத்தின் பாதுகாப்பிற்காக பிரிகேட்(படைப்பிரிவு) தலைமையகமாக இருந்தது.

இங்கு உரை நிகழ்த்திய பாதுகாப்பு செயலாளர் அவர்கள், எமது பாதுகாப்புப் படையினர், இலங்கையர்களான நாம் அவர்களைப் பற்றி பெருமிதம் கொள்ளும் வகையில் தாய்நாட்டுக்காக மிகவும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். அத்துடன் அவர்கள் சிறந்த அமைதி காப்பாளர்களாகவும் இருப்பார்கள். அவர்களின் அறிவை மேம்படுத்துவதற்கான குறிப்பாக அவர்களின் மொழி திறனை மெருகேற்றுவதில் அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இராணுவத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள சில குற்றச்சாட்டுகள் வெறும் கட்டுகதைகளே என்றும், அதனை ஐ.நா. மற்றும் ஏனையோர்கள் நிராகரிப்பார்கள் என்பதில் உறுதியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை இராணுவம் அனுபவம், கௌரவம் மற்றும் நம்பக தன்மையுள்ளவர்களாகவே இருந்துள்ளார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஒரு சில தனி நபர்கள் மேற்கொண்ட தவறான செயல்களுக்காக, சட்டபூர்வமான மற்றும் சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் வலியுறுத்திய அவர், இந்த விடயத்தில் ஐ.நாவும் திருப்தியடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஒழுக்கத்தை நிலைநாட்ட வேண்டியதன் முக்கியத்துவம் மற்றும் அவசியத்தை வலியுறுத்திய அவர் மனிதர்கள் எனும் வகையில் ஓரிரு தனிநபர்கள், குற்றமிழைத்திருந்தால், ஒட்டுமொத்தமாக இராணுவம் அதற்காக பொறுப்பேற்க முடியாது, அதுவே சட்டத்தின் விதி எனக்குறிப்பிட்டார்.

அமைதி காக்கும் பணிகளுக்காக வீரர்களை அனுப்பும் விடயத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் மேலும் நெருக்கமாக பணியாற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவி திருமதி. கிளாரி மைட்ரிரெட், அமெரிக்க தூதரக இராஜதந்திரிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

.

     

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்