››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

யாழ் பிரதேசத்தில் 683ஏக்கர் காணி விடுவிப்பு

யாழ் பிரதேசத்தில் 683ஏக்கர் காணி விடுவிப்பு

 

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் யாழ் பாதுகாப்பு படையினரால் கையாளப்பட்ட யாழ் பொது மக்களிற்கு சொந்தமான தெல்லிப்பலை மாவட்டத்தில் சுமார் 683 ஏக்கர் காணிகள் அதன் சட்டபூர்வ உரிமையாளர்கள் 964 பேருக்கு அண்மையில் (ஏப்ரல், 13) யாழ் மாவட்ட செயலாளர் திரு. நாகலிங்கம் வேதநாயகம் அவர்களின் பங்களிப்போடு வழங்கப்படடது.

சில மாதங்களாக இவ்வாறு காணிகளை கைளிக்கும் நிகழ்வுகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதுடன் பலாலி, தெல்லிப்பலை ஆகிய பிரதேசத்தில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் இவ்வாறு மக்களுக்கு வழங்கி வைக்கப்பப்பட்டது.

இக் காணி விடுவிப்பு பணிகள் 2018ஆம் ஆண்டின் சிங்கள தமிழ் சித்திரைப் புத்தாண்டு நிகழ்வை முன்னிட்டு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவர்களின் அவர்களின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

இந் நிகழ்வில் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் ஒருங்கிணைப்போடு மீள் குடியேற்ற அமைச்சு மற்றும் இந்து மத விவகார அமைச்சு, யாழ் மாவட்ட செயலக உறுப்பினர்கள் மற்றும் யாழ் பாதுகாப்பு படை வீரர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வெள்ளிக்கிழமை பாலாலி இராணுவ முகாமில் வைத்து இக் காணிகள் விடுவிக்கப்பட்டதுடன் இந் நிகழ்வானது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற நல்லிணக்கம் மற்றும் ஒருங்கிணைப்பை மையமாகக் கொண்டு அமைந்தது.

இந் நிகழ்வில் இராணுவத் தளபதியினால் காணிகளுக்கான உறுதிப் பத்திரங்கள் மாவட்ட செயலாளர் அவர்களின் பங்களிப்போடு வழங்கப்பட்டது.

நன்றி_ இராணுவ ஊடகம்



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்