››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

"எஸ்எல்என்எஸ் சிந்துறால' இலங்கை கடற்படையில் இணைவு

'இலங்கை கடற்படை கப்பல் சிந்துறல' இலங்கை கடற்படையில் இணைவு

இலங்கை கடற்படையின் புதிய கப்பலுக்கு பிரதமரினால் அதிகாரமளிப்பு

[2018/04/20]

இலங்கை கடற்படையின் நவீன உயர் தொழில்நுட்ப ஆழ்கடல் ரோந்துக் கப்பலுக்கு, ஆணையதிகாரம் அளிக்கும் நிகழ்வு நேற்று மாலை (ஏப்ரல், 19) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறையில் இடம்பெற்றது. இவ்வைபவத்தின் போது இலங்கை கடற்படையின் நவீன புதிய உயர் தொழில்நுட்ப ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ”இலங்கை கடற்படை கப்பல் சிந்துறல” என பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களினால் ஆணையதிகாரம் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கொழும்பு துறைமுக வளாகத்துக்கு வருகை தந்த பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு கடற்படை மரபுகளுக்கு அமைவாக விசேட கடற்படை அணிவகுப்பு மரியாதையளிக்கப்பட்டது. பின்னர் பிரதமரினால் புதிய கப்பலின் கட்டளை அதிகாரியிடம் கப்பலுக்கான அதிகார பத்திரம் வழங்கப்பட்டது. அவ்வேளை கப்பலின் கட்டளை அதிகாரி குறித்த பத்திரத்தை வாசித்தார். பின்னர் இடம்பெற்ற பெயர்பலகை திரைநீக்கத்தின் பின் பிரதமர், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க மற்றும் அதிதிகள் ஆகியோர் இக்கப்பலை சுற்றிப்பார்வையிட்டனர்.

”இலங்கை கடற்படை கப்பல் சிந்துறல” இலங்கை கடற்படையின் இரண்டாவது அதி நவீன உயர் தொழில்நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் ஆகும். இலங்கை கடற்படையின் முதலாவது அதி நவீன உயர் தொழில்நுட்ப ஆழ்கடல் ரோந்துக் கப்பலான ”இலங்கை கடற்படை கப்பல் சயுரல” முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் கடந்த வருடம் ஆகஸ்ட்மாதம் 02ம் திகதி ஆணையதிகாரம் அளிக்கப்பட்டது.

105.7 மீற்றர் நீளமான இவ் ஆழ்கடல் ரோந்துக் கப்பலின் அகலம் 13.6 மீற்றர் ஆகும். இக்கப்பல் இலகு உலங்குவானூர்தி தரையிறங்குவதற்கான இலகுரக ஹெலிகொப்டர் இறங்குதளத்தையும் அது தரித்து வைப்பதற்கான இடத்தினையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அத்துடன் இக் கப்பலில் 18 கடற்படை உட்பட 118 கடற்படை குழுமத்தினர் ஒரேநேரத்தில் தங்குவதற்கான விசாலமான விடுதி மற்றும் ஏனைய வசதிகளையும் கொண்டுள்ளது.

இந்நிகழ்வில், மகா சங்க உறுப்பினர்கள், ஏனைய மத தலைவர்கள், அமைச்சர்கள், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, விமானப்படை தளபதி, முன்னாள் தளபதிகள், இந்திய கடற்படையின் துணை கடற்படை பிரதானி, தூதரக அதிகாரிகள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் மற்றும் அதிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     
     

மேலும் புகைப்படங்களை பார்வையிட >>



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்