››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு அமைச்சு 'சூரிய மங்கல்ய' புதுவருட நிகழ்னை கொண்டாடியது

பாதுகாப்பு அமைச்சின் 'சூர்ய மங்கல்ய' புதுவருட கொண்டாட்ட நிகழ்வுகள்

[2018/04/22]

சிங்கள தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் பாரம்பரிய புத்தாண்டு விளையாட்டு நிகழ்வான 'சூர்ய மங்கல்ய' இன்று (ஏப்ரல், 22) இடம்பெற்றது. இப்பாரம்பரிய புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு, பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களின் தலைமையில் கொழும்பு விமானப்படை மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. ஷாலினி வைத்தியரத்ன அவர்களும் வருகை தந்திருந்தார்.

இங்கு இடம் பெற்ற பாரம்பரிய புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகளில் கயிறு இழுத்தல், முட்டி உடைத்தல், கிரீஸ் மரம் (சறுக்கு மரம்) ஏறுதல், தலையனை சண்டை, சிறுவர் ஓட்டப்போட்டிகள், மாறுவேடப் போட்டிகள், (வினோத உடை அலங்காரம்) ஆகிய போட்டிகள் இடம்பெற்றதுடன், புதுவருட அழகு ராஜா மற்றும் அழகு ராணி தெரிவு செய்யும் விஷேட நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். மேலும் இங்கு இடம்பெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கு பிரதம அதிதி மற்றும் ஏனைய அதிதிகள் ஆகியோரினால் பெறுமதியான பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன. மேலும் பொதுப்பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட பாதுகாப்பு அமைச்சு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்குவிப்பு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும், இங்கு இடம்பெற்ற நிகழ்வுகளில் செயலாளர் உட்பட அமைச்சில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களும் கலந்து சிறப்பித்தமை விஷேட அம்சமாகும். இதன்போது அனைவரும் தமது திறமைகளை வெளிப்படுத்துவதில் சிறப்பாக செயற்பட்டார்கள்.

இந்நிகழ்வுகள் அனைத்தும் சிவில் பாதுகாப்பு திணைக்கள பான்ட் வாத்திய குழுவினரின் இசை நிகழ்வுடன் இனிதே நிறைவுபெற்றது.

இந்நிகழ்வில், இராஜாங்க அமைச்சின் பாதுகாப்பு செயலாளர் திரு. சுனில் சமரவீர, மேலதிக செயலாளர்கள், விமானப்படை தளபதி, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி, அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், மற்றும் பெரும் எண்ணிக்கையிலான அமைச்சின் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களும் கலந்து கொண்டனர்.

     
     
     
     

மேலும் புகைப்படங்களை பார்வையிட >>



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்