››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கடலோர பாதுகாப்பு படை உயிர் காப்புபிரிவினர் 1000க்கும் அதிகமான உயிர்களை காத்துள்ளனர்

கடலோர பாதுகாப்பு படை உயிர் காப்புபிரிவினர் 1000க்கும் அதிகமான உயிர்களை காத்துள்ளனர்

[2018/04/22]

கடலோர பாதுகாப்பு படை ஹிக்கடுவ உயிர் காப்பு நிலையத்தின் உயிர் காப்புபிரிவினர் கடலில் மூழ்கிய இளைஞர்கள் மூவரின் உயிர்களை காப்பற்றியதன் ஊடாக கடலோர பாதுகாப்பு படையானது உயிர்காப்பு நடவடிக்கைகளில் 1000க்கும் அதிகமான உயிர்களை காப்பாற்றி மற்றுமொரு முக்கிய மைல்கல்லை கடந்துள்ளது.

கடந்த வாரம் (ஏப்ரல், 17) தென்பகுதியில் உள்ள பிரபலமான ஹிக்கடுவ கடற்கரையில் பணியிலிருந்த கடலோர பாதுகாப்பு படையின் உயிர் காப்பாலர்களினால் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த 19 - 21 வயதையுடைய மூன்று இளைஞர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் உயிர்காப்புப் பிரிவு 2009ஆம் ஆண்டு தமது நடவடிக்கைகளைஆரம்பித்தது. இவ்வாண்டு டிசம்பர் மாதத்தில் மிரிஸ்ஸ கடற்பரப்பில் மூழ்கிய கொரிய நாட்டுப் பிரஜை இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் உயிர்காப்புப் பிரிவினரால் காப்பாற்றப்பட்டதை தொடர்ந்து, நாடுமுழுவதும் முக்கிய கடற்கரையோரங்களில் அமைந்துள்ள உயிர்காப்பு பிரிவுகளின் மூலம் கடலோர பாதுகாப்பு படையின் உயிர்காப்பாளர்கள், கடலில் மூழ்கிய உள்ளூர் மற்றும் பிரான்ஸ், சீனா, அவுஸ்திரேலியா, தாய்லாந்து, நேபாளம், ஸ்பெயின், சவுதி அரேபியா, நெதர்லாந்து, இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் ஜெர்மனி ஆகிய வெளி நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு பிரஜைகள் 405 உட்பட 1000க்கும் அதிகமான உயிர்களை காத்துள்ளனர்.

மேலும், இலங்கை கடலோர பாதுகாப்பு படை நாடுமுழுவதும் 13 உயிர்காப்பு நிலையங்களை நிறுவி பராமரித்து வருகின்றது.
பலபிட்டியவில் அமைந்துள்ள உயிர்காப்பு பயிற்சிப் பாடசாலையின் மூலம் நிபுணத்துவம் வாந்த உயிர்காப்பாளர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை கச்சதீவில் வருடாந்தம் இடம்பெறும் புனித அந்தோனியார் உட்சபம் மற்றும் கதிர்காம திருவிழா போன்ற நிகழ்வுகளிலும் காப்புபிரிவினர் மேற்படி உயிர்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இலங்கை கடலோர பாதுகாப்பு படையானது பாடசாலை மாணவர்கள், உயர்கல்வி முப்படை வீரர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான உயிர்காப்பு தொடர்பான கல்வி விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடலோர காவல்படையின் உயிர்காப்பு படை வீரர்கள் கடற்கரைகளை மிக உன்னிப்பாக அவதானிப்பதன் ஊடாக கடற்கரைகள் மிகவும் பாதுகாப்பான வலயங்களாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்