››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இந்தோனேசிய கொமொடோ பயிற்சி - 2018” இல் இலங்கை கடற்படைக் கப்பல் சாகர பங்கேற்பு

கொமொடோ பயிற்சி - 2018” இல் பங்கேற்க சாகர இந்தோனேசியா நோக்கி பயணம்

[2018/03/25]

பலபரிமாணங்களைக் கொண்டமைந்த கடற்படைப் பயிற்சியான “கொமொடோ ” மற்றும் “சர்வதேச கடற்படை மீளாய்வு 2018” ஆகியவற்றில் பங்கேற்பதற்காக இலங்கை கடற்படைக் கப்பல் சாகர நேற்றையதினம் (ஏப்ரல், 24) பயணமானது. இலங்கை கடற்படையின் ஆழ்கடல் ரோந்துக்கப்பலான சாகர, இந்தோனேசியவில் நடைபெறவுள்ள கடற்படை பயிற்சிகளில் இலங்கை கடற்படையினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், கிழக்கு துறைமுகமான திருகோணமலை துறைமுகத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இக்கடற்படை பயிற்சிகளில் பங்கேற்பற்காக, இலங்கை கடற்படைக் கப்பல் சாகரவுடன் 20 கடற்படை அதிகாரிகள், 04 இடைபயிலுனர் அதிகாரிகள் உட்பட சுமார் 192 பேர்களைக் கொண்ட கடற்படைக் குழுவினர் பயனமாகியுள்ளதுடன் அவர்கள் மே மாதம் 04ம் திகதி இந்தோனேசியாவின் லெம்பார் துறைமுகத்தை சென்றடைவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நான்கு நாட்களைக் கொண்ட கொமோடோ பயிற்சி - 2018 ஆனது, லாம்போக் தீவில் மேற்கு நோஸா தென்காராவில் உள்ள லம்பார் துறைமுகத்தில் மே மாதம் 04ம் திகதி தொடங்குகிறது. உலகம் முழுவதிலும் இருந்து 43 கடற்படைகளின் பிரதிநிதிகள் இணைந்து பங்கேற்கவுள்ள இக்கடற்படை பயிற்சியில் 12 முக்கிய செயலமர்வுகள், கலை கலாச்சார நிகழ்ச்சிகள், கடல் கண்காட்சிகள், பொறியியல் சிவிக் செயற்திட்டங்கள் (Encap) மற்றும் மருத்துவ சிவிக் செயற்திட்டங்கள் (Medcap)ஆகியன இடம்பெறவுள்ளன. பயிற்சியின் இறுதி நாளன்று களமுனை பயிற்சிகள் மற்றும் கப்பல் அணிவகுப்பு என்பனவும் இடம்பெறவுள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கொமொடோ பயிற்சி - 2018, இந்தோனேசிய கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்படுகிறது. 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பலபரிமாணங்களைக் கொண்டமைந்த இக்கடற்படைப் பயிற்சி இவ்வாண்டு மூன்றாவது முறையாக இடம்பெறுகின்றது.

2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தோனேசியாவின் தெலுக் பெயூர் துறைமுகத்தில் இடம்பெற்ற கொமொடோ பயிற்சி-2016இல் இலங்கை கடற்படையினை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை கடற்படைக் கப்பல் சமுத்ரா பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்