››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

2018 தேசிய ரணவிரு மாத முதலாவது கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு

2018 ஆம் ஆண்டின் முதலாவது ரணவிரு கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு

[2018/05/02]

யுத்த வீரர்களின் ஞாபகார்த்த மாதத்தை நினைவுகூறும் வகையிலான முதலாவது ரணவிரு கொடியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு அணிவிக்கும் நிகழ்வு இன்று (மே, 02) இடம்பெற்றது. இதன்போது 2018ஆம் ஆண்டின் தேசிய ரணவிரு மாதமாக இம்மாதம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மூன்று தசாப்தங்களாக நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்த மனிதாபிமான நடவடிக்கையில் தமது உயிர்களை தாய் நாட்டுக்காக தியாகம்செய்த படை வீரர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில் வருடாந்தம் இந்த ரணவிரு மாதம் அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுகிறது.

ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவி திருமதி அனோமா பொன்சேகாவினால் முதலாவது கொடி ஜனாதிபதி அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது.

கடந்த வருடம் கொடி விற்பனையின் மூலம் கிடைக்கப்பெற்ற வருமானம் மாகாண ஆளுநர்களினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட அதேவேளை,. இவ்வருடத்திற்கான புதிய ரணவிரு கொடிகள் மாகாண ஆளுநர்களிடம் ஜனாதிபதி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன. பின்னர், இன்று முதல் ஜூன் 02 திகதி வரையான காலப்பகுதி ரணவிரு மாதமாக ஜனாதிபதி அவர்களினால் பிரகடனப்படுத்தப்பட்டது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் மூன்று வருட முன்னேற்றம் குறித்து மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்ட நூல் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன அவர்களினால் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் மாகாண ஆளுநர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள். முப்படைகளின் தளபதிகள், சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நன்றி_ஜனாதிபதி செய்தி ஊடகம்



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்