››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

முப்படை வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சக்கர நாற்காலிகள் அன்பளிப்பு

முப்படை வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சக்கர நாற்காலிகள் அன்பளிப்பு

[2018/05/06]

எம்.சீ.ஏ ஹமீட் ஹாஜியார் நற்பணி மன்றத்தின் இஸ்லாமிய ஆன்மீக வளர்ச்சி மையம் சகல சமூகங்களுக்கிடையிலும் ஒற்றுமையை மேம்படுத்தும் வகையில், முப்படை வீரர்கள், பொலிஸ் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு 110 சக்கர நாற்காலிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை (மே, 05) இடம்பெற்றது. இந்நிகழ்வில் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனெரல் மகேஷ் சேனநாயக அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

பெரும்பான்மை மத மற்றும் இஸ்லாமிய சமூகங்களுக்கிடையே மத ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில், நற்பணி மன்றத்தின் தலைவர் எம்.சீ.ஏ ஹமீட் ஹாஜியார் அவர்களால் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனெரல் மகேஷ் சேனநாயக அவர்களிடத்தில் 1.5 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய சக்கர நாற்காலிகளை காலி முகத்திடல் வளாகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, 5 ஆவது தடவையாக இடம்பெறும் இந் நன்கொடை நிகழ்வானது, இராணுவ வீரர்கள், சிறுவர்கள், மற்றும் வயோதிபர்களுக்கும் சக்கர நாற்காலிகளை தொடர்ந்தும் வழங்கிவருகிறது. இவ்வாறு சக்கர நட்காளிகளை பெறுபவர்கள் நாடு பூராகவுமுள்ள இராணுவம், பொலிஸ் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரால் தெரிவு செய்யப்பட்டு வழங்கி வைக்கப்படுகிறது.

நிதி தலைவரான எம்.சீ.ஏ ஹமீட் ஹாஜியார் அவர்களின் விசுவாசம் நல்லெண்ணத்தின் நோக்கம் சுல்தானுல் ஆரிபீன், ஷைஹூல் முப்லிஹீன் எம்.எஸ்.எம் அப்துல்லா அவர்களினால் ஒவ்வெறு வருடமும் ஜூலை 23 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரை இந் இஸ்லாம் ஆன்மீக அமைப்பு நிறுவனமானது மட்டகளப்பு மாவட்டத்தில் ஆரயம்பதி பிரதேசத்தில் அமைந்துள்ளது.

இந் நற்பணி மன்றத்தின் ஊடாக நற்செயல்கள் செய்து மனிதகுலத்தை நித்திய சத்தியத்தின்பால் இட்டுச்செல்வதும், இறைவன் ஆசீர்வாதம் மற்றும் வழிகாட்டலில் எல்லோருக்கும் சமாதானத்தையும் அமைதியையும் பெற்றுக்கொள்வதுமே இதன் பிரதான நோக்கமாகும்.

இந் நிகழ்விற்காக 231 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் செனரத் நிவுன்ஹெல்ல மற்றும் சட்ட நடவடிக்கை பணிப்பாளர் ஏடிவடி ஜயசிங்க மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்