››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை கடற்படையினரால் மாவடிபுரம் மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை முகாம்

இலங்கை கடற்படையினரால் மாவடிபுரம் மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை முகாம்

[2018/05/09]

வடக்கு இலங்கை கடற்படையினர் மாவடிபுரம் தீபகற்பத்தில் உள்ள மக்களுக்கு மீண்டும் ஒரு மருத்துவ சிகிச்சை முகாம் ஒன்றினை நடாத்தியுள்ளனர். இந்நிகழ்வு காங்கேசன்துறை மாவடிபுரம் பகுதியில் அண்மையில் (மே, 06) இடம்பெற்றுள்ளது. மாவடிபுரம் மாதிரிக்கிராமத்தில் இடம்பெற்ற இவ் இலவச மருத்துவ சிகிச்சை நிகழ்வு கடற்படையின் சமூக பொறுப்புக்கள் திட்டத்தின் கீழ் வடக்கு கடற்படை கட்டளைப் பிரிவினால் நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த இம்மருத்துவ முகாமில் கடற்படையினர் மற்றும் மருத்துவ அதிகாரிகள் ஆகியோரினால் சுமார் 280 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில், தொற்று நோய், தொற்றா நோய் மற்றும் வேறு நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டதுடன், நீண்டகால தொற்றா நோய்களுக்கும் ஆரம்பகட்ட மருத்துவ பரிசோதனைகள் வழங்கப்பட்டன. மேலும் இதன்போது, கள ஆய்வுகள் தொடர்பான ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்பட்டன.

மேலும், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை திரிபோஷா நிறுவனம் ஆகிவற்றின் உதவியுடன் நோயாளிகளின் சிகிச்சைகளுக்கு தேவையான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்