››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

”லிட்டில் ஹார்ட்” நிதியத்திற்கான இராணுவத்தின் நன்கொடை ஜனாதிபதியிடம் கையளிப்பு

”லிட்டில் ஹார்ட்” நிதியத்திற்கான இராணுவத்தின் நன்கொடை ஜனாதிபதியிடம் கையளிப்பு

[2018/05/10]

“லிட்டில் ஹார்ட்” நிதியத்திற்கு இலங்கை இராணுவம் 70 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளதுடன், அதனை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (10) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

சேவையிலுள்ள இராணுவத்தினரின் அரை நாள் சம்பளம் இவ்வாறு ”லிட்டில் ஹார்ட்” நிதியத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இராணுவ மகளிர் படையணியை பிரதிநிதித்துவப்படுத்தி கப்டன் பியுமி சேதனா, அதிகாரம் அளிக்கப்பட்ட அதிகாரி சுமித் விஜேசிங்க, இராணுவ சிப்பாய்களை பிரதிநிதித்துவப்படுத்தி ருவன் குமார செபர், மகளிர் இராணுவ சிப்பாய்களை பிரதிநிதித்துவப்படுத்தி மகளிர் சமிக்ஞை படையணி வீராங்கனை தினக்க்ஷி ஆகிய உறுப்பினர்களினால் இந்த நிதியத்திற்குரிய காசோலை ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி அவர்களால் குறித்த காசோலை ”லிட்டில் ஹார்ட்” நிதியத்தின் வைத்திய நிபுணர் துமிந்த சமரசிங்க மற்றும் உறுப்பினர் சுமேத ரணசிங்க ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க உள்ளிட்ட இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நன்றி : president.gov.lk



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்