››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

குருநாகலையில் அமைக்கப்பட்ட ‘வயம்ப ரண அபிமன்’ இராணுவ நினைவு துாபி திறந்து வைப்பு

குருநாகலையில் அமைக்கப்பட்ட ‘வயம்ப ரண அபிமன்’ இராணுவ நினைவு துாபி திறந்து வைப்பு

[2018/05/13]

முப்படை வீரர்கள் மற்றும் பொலிஸ் அங்கத்தவர்களின் வீரம் இதைரியத்தை கௌரவிக்கும் முகமாக இராணுவ நினைவு துாபி நிர்மாணிக்கப்பட்டு கடந்த (11) ஆம் திகதி வெள்ளிக் கிழமை எதுகல்புரையில் ‘வயம்ப ரண அபிமன்’ இராணுவ நினைவு துாபி திறந்து வைப்பு.

ரணவிரு சேவை அதிகாரியின் அழைப்பை ஏற்று இந் நிகழ்விற்கு முப் படைகளின் தளபதியான அதிகாரியான அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் உட்பட பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவ தளபதி மற்றும் கடற்படை தளபதிகளும் கலந்து கொண்டானர்.

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் உட்பட அனைவரினாலும் தேசிய கீதம் பாடியதை தொடர்ந்து நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அனைத்து மத ஆராதனைக்கு பிறகு ரனபரா, ஹெவிசி, புரப்பட்டு, மகுல் பெர மற்றும் கெடபெர மற்றும் சம்பிரதாய பெரைகளுடன் தங்கள் உயிர்களை தியாகம் செய்த போர்வீரர்களின் தைரியத்தையும், உறுதியையும் நினைவு கூறும் வகையில் இசைகப்பட்டன.

ஆதன் பின்னர் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அத்மிரால் ரவிந்ர விஜேகுனவர்தன மற்றும் இராணுவ தளபதி லெப்டினென்ட ஜெனரல் மகேஷ் சேனநாயக கடற் படைத் தளபதி வயிஸ் அத்மிரால் சிரிமேவன் ரனசிங்க மற்றும் கடற்படைகள் மற்றும் பொலிஸ் பிரதிநிதிகளும் இராணுவ நினைவு துாபிக்கு மலர் அஞ்சலி செலுத்தி நாட்டிற்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்த போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கு அனைவருக்கும் வாய்பு கிடைத்தது.

இராணுவ நினைவு துhபிக்கு ஜனாதிபதி அவர்களால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதின் பின்னர் நாட்டிற்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்த போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கு அவர்களுடைய துணைவியர் மற்றும் சொந்தங்களும் போர் வீரர்களின் கௌரவத்தை நினைவுகூரும் வகையில் அவர்களின் நினைவுச்சின்னத்தின் கல்லறையின் மலர் அஞ்சலி செலுத்தி தனது கண்ணணீரால் நினைவு படுத்தினர்.

ஆதனைத் தொடர்ந்து இராணுவ சம்பிரதாய முறைப்படி சூரியன் உதிக்கும் போதும் மறையும் போதும் நாட்டிற்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்த வீரர்களுக்காக முப்படை வீரர்கள் பொலிஸ் பேண்ட் வாத்திய குழுவினரால் இராணுவத்தினரை நினைவு கூறும் வகையில் பியுகள் இசையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.

கவர்னர் ஆரிய பண்டார, கவர்னர் திரு. தர்மசிறி தசநாயக்க முன்னாள் பிரதி அமைச்சர் சாந்த பண்டார, மற்றும் பல அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

குருநாகல் - தம்புள்ள பிரதான வீதியில் விரிவாக்கப்பட்டதுடன் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் ரணவிரு சேவா ஆணையத்தின் வழிகாட்டுதலின் கீழ் குருநாகல் மற்றும் மாலிகாபிட்டிய விளையாட்டு மைதானத்தின் அருகில் புதிய நினைவுச்சின்னம் நிறுவப்பட்டது.

இலங்கை இராணுவத்தின் பொறியியல் சேவைப் படையினரால் மேற்கொள்ளப்பட்டதுடன். நாட்டிற்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்த போர் வீரர்களுக்குக்கு வடமேல் மாகாணத்தில் அணைத்து வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டு இதை நிர்மாணிப்பதற்கு 27 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

அத்துடன் வீதி அபிவிருத்தி திட்டத்திட்காக இடம் கிடைப்பதற்கு முன்பே ரணவீர நினைவிடம் அகற்றப்பட்ட போதிலும் நாட்டில் ரணவிரு வீரர்களை சிலர் போர் மறந்து வெளியேற்றத் தொடங்கினர் சிலர் அரசியலாக பயன்படுத்த முயன்றனர்.

ஆனாலும் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் குருநாகளில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் புதிய இராணுவ நினைவு துாபி அமைக்க வாக்குறுதியழித்தார், அதன் படி 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி அடி கல் நாட்டப்பட்டது.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் படி புதிய ரணவிரு நினைவுச்சின்னத்தின் திறப்பு விழாவின் போது ஜனாதிபதி "எந்தவொரு தருணத்திலும் இராணுவத்தினரை கண்டிக்க தற்போது அரசாங்கம் முயற்சித்து வருவதில்லை, அவர்கள் தமது உரிமையையும் தேசத்தின் கண்ணியத்தையும் வழங்க முற்படுகின்றனர்" என்றார்.

போர் வீரர்களுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் சமரசம் செய்யப்பட்டுள்ளன என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்துக் கொள்வது யுத்த வீரர்களை பழிவாங்குவது குற்றச்சாட்டுகள் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டாலும், உண்மையில் போர் வீரர்களின் பழிவாங்குதல் கடந்த ஆட்சியின் போது நடந்தது தற்போதைய அரசாங்கம் யுத்த வீரர்களின் கௌரவத்தை பாதுகாக்க சர்வதேச ஆதரவுடன் அதன் பொறுப்பைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த சந்தர்பத்தில் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ஜயசிரி ராமநாயக அவர்களால் வட மாகாண கூட்டுறவு உறுப்பினர்களின் நிதி நன்கொடை ரணவிரு நலன்புரி நிதியத்தின் மூலம் ரணவீர நினைவு துாபி அமைக்க காசோலை ஒன்று ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நன்கொடை ஜனாதிபதியவர்களால் வட மாகணத்தின் பிரதான செயலாளர் ஜீ.பி.எம் சிரிசேன அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந் நிகழ்விற்கு வட மாகணத்தின வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க புதிய ரணவிரு நினைவு துாபியை ஜனாதிபதியிடம் ஒப்படைத்தார்.

     

நன்றி: இராணுவ தகவல் பிரிவு



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்