››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இந்திய பாதுகாப்புப்படை பிரதானி பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

இந்திய பாதுகாப்புப்படை பிரதானி பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

[2018/05/14]

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய இராணுவப் பிரதாணி ஜெனரல் பிபின் ரவாத் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (மே, 14) சந்திதித்தார்.

இந்திய இராணுவப் பிரதாணி, அவரின் பாரியார் திருமதி. மதுலிகா ரவாத் அவர்களுடன் இணைந்து ஏழு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது, பாதுகாப்பு செயலாளர் மற்றும் இந்திய இராணுவப் பிரதாணி ஆகியோருக்கிடையில் இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் அவர்களுக்கிடையே நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வில், பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரியான மேஜார் ஜெனரல் டீஏஆர் ரணவக்க அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஜெனரல் பிபின் ராவத், சிம்லா புனித எட்வர்ட் கல்லூரி மற்றும் கதாக்வாஸ்லா தேசிய பாதுகாப்பு கலாசாலை ஆகியவற்றின் முன்னாள் மாணவர் ஆவார். அவர் இந்திய இராணுவ கலாசாலையில் இந்திய இராணுவத்தின் பதினோராவது கர்கா ரைபிள்ஸ் படைப்பிரிவிரில் அதிகாரமளிக்கப்பட்ட இராணுவ அதிகாரியாக 1978ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய இராணுவத்தில் இணைந்து கொண்டார்.

இவர் வெலிங்டன் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் கல்லூரியில் தமது பட்டப்படிப்பினை நிவர்த்தி செய்த அவர், அமெரிக்காவின் ஃபோர்ட் லீவென்வொர்த் உயர் கட்டளை மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரி கற்கைநெறிகளை பூர்த்திசெய்தார். மாற்றும் அவர் UYSM, AVSM, YSM, SM, VSM உள்ளிட்ட பதக்கங்களுக்கு சொந்தமானவராகவும் திகழ்கிறார். மேலும் அவர் 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி இந்திய இராணுவத்தின் இராணுவ பிரதானியாக நியமிக்கப்பட்டார்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்