››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவத்தினரால் மரங்கள் அகற்றும் பணிகள்

இராணுவத்தினரால் மரங்கள் அகற்றும் பணிகள்

[2018/05/16]

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 58, 583 ஆவது படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் (13) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கேகாலையில் அமைந்துள்ள அடலவத்த பின்தெனிய பிரதேசத்தில் மரங்களை அகற்றும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டனர்.

அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே அவர்களுக்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய படைத் தளபதியினால் 8 ஆவது சிங்கப் படையணிக்கு இந்த பணிகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டன.

இந்த பணிப்புரைக்கமைய எட்டாவது சிங்கப் படையணியினால் இந்த மரங்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. களிகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட 11 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்த இயற்கை அனர்த்தத்தின் போது பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

நன்றி : இராணுவ செய்தி ஊடகம்



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்