››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பத்தரமுல்லையில் தேசிய போர் வீரர்கள் ஞாபகார்த்த விழா 2018 நிகழ்வு

பத்தரமுல்லையில் தேசிய போர் வீரர்கள் ஞாபகார்த்த விழா 2018 நிகழ்வு

[2018/05/20]

2018ஆம் ஆண்டுக்கான தேசிய போர் வீரர்கள் ஞாபகார்த்த விழா நிகழ்வு பத்தரமுல்லை பாராளுமன்ற விளையாட்டரங்கில் அமைந்துள்ள இராணுவ நினைவுத் தூபிக்கு அருகில் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நேற்று (மே, 19) இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களும் வருகை தந்திருந்தனர்.

இவ்வருடம் ஒன்பதாவது முறை இடம்பெறும் இன் நிகழ்வானது, தீவிரவாதத்தை தோற்கடித்து இலங்கை மக்களுக்கு சுதந்திரமான தேசத்தை உருவாக்கிக் கொடுப்பதற்காக போர்க்களத்தில் யுத்தம் புரிந்த போர் வீரர்களை நினைவுகூரும் முகமாக வருடாந்தம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்விற்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்கள், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன, பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன மற்றும் ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவி திருமதி. அனோமா பொன்சேகா ஆகியோரால் வரவேற்கப்பட்டார்.

பின்னர் ஜனாதிபதி அவர்கள், இராணுவ நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தி, தாய் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த சகல போர் வீரர்களுக்கும் மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில், சபாநாயகர், அமைச்சரவை அமைச்சர்கள், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி , முப்படை தளபதிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் போர் வீரர்களின் உறவினர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.

     
     
     

 மேலும் புகைப்படங்களை பார்வையிட >>



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்