››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை மற்றும் ருவாண்டா, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து

இலங்கை மற்றும் ருவாண்டா, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து

[2018/05/18]

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் தலைமையில் ருவாண்டா குடியரசுக்கு சென்ற தூதுக்குழுவினர், இலங்கை மற்றும் ருவாண்டா குடியரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் (மே, 15) கைச்சாத்திட்டுள்ளனர்.

அண்மையில், ருவாண்டா அரசின் அழைப்பினை ஏற்று உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு ஆபிரிக்க நாட்டுக்கு சென்ற பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இவ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளளார்.

இலங்கை மற்றும் ருவாண்டா பாதுகாப்பு அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற பாதுகாப்பு தொடர்பாக இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றபோது இப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானி, ஜெனரல் பி.வயவும்பா மற்றும் விமானப்படை பிரதானி, மேஜர் ஜெனரல் சி. கரம்பா ஆகியோர் உள்ளடங்கிய ருவாண்டா நாட்டின் தூதுக் குழுவினருக்கு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர், கௌரவ ஜெனரல் ஜேம்ஸ் கபரேபே அவர்கள் தலைமை வகித்தார்.

குறித்த இப்பாதுகாப்பு கலந்துரையாடல் அந்நாட்டின் தலைநகர் கிகாலி இலுள்ள பாதுகாப்பு படைகள் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இங்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் விஜேவர்த்தன அவர்கள், இரு நாடுகளுக்கும் இதேபோன்ற ஒரு சூழ்நிலையில் அனுபவமுள்ளதால், அவற்றினை அதிகம் பகிர்ந்து கொள்ளவும், கற்றுக்கொள்ள உள்ளதுடன், இவ் ஒப்பந்தத்தின் ஊடாக இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் நட்பை மேலும் பலப்படுத்துவதாக அமையும் என்பதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் ருவாண்டா மீட்டெழுந்துள்ளதை பாராட்டியதுடன், கூட்டு தேசிய ஒருங்கமைபில் ஏனைய நாடுகளுக்கு ஒர் உதாரணமாக விளங்குவதாகவும் தெரிவித்தார்.

மேலும், பயிற்சிகளுக்கான படையினர் பரிமாற்றம் மற்றும் திறன் ஒருங்கமைப்பு ஆகியவற்றில் பாதுகாப்பு ஒத்துழைப்புக்களை மேம்படுத்த இவ் ஒப்பந்தம் உறுதுணையாக அமைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் படலந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளைகள் மற்றும் பணியாளர்கள் கல்லூரி ஆகியவற்றில் தற்போது ருவாண்டா மாணவர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் ஆகியோர் கல்விகற்கும் வாய்ப்பினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்விஜயத்தின்போது, கிகாலி போர்வீரர் நினைவகத்திற்கு சென்ற அவர் அங்கு தனது அஞ்சலியையும் செலுத்தினார.

     
     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்