››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கொமொடோ பயிற்சி - 2018” இல் பங்கேற்ற சாகர தாய்நாடு திரும்பியது

கொமொடோ பயிற்சி - 2018” இல் பங்கேற்ற சாகர தாய்நாடு திரும்பியது

[2018/05/21]

இந்தோனேசியவில் இடம்பெற்ற “சர்வதேச கடற்படை மீளாய்வு மற்றும் “கொமொடோ 2018” கடற்படைப் பயிற்சிகளை நிறைவு செய்த இலங்கை கடற்படைக் கப்பல் சாகர வெள்ளிக்கிழமை (மே, 18) தாய் நாடு திரும்பியது.

இலங்கை கடற்படையின் ஆழ்கடல் ரோந்துக்கப்பலான சாகர, பலபரிமாணங்களைக் கொண்டமைந்த கடற்படைப் பயிற்சிகளில் கலந்துகொள்ளும் வகையில், இலங்கை கடற்படையினை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 192 பேர்களைக் கொண்ட கடற்படைக் குழுவினருடன் கிழக்கு துறைமுகமான திருகோணமலை துறைமுகத்திலிருந்து இந்தோனேசியாவின் லெம்பார் துறைமுகத்தை நோக்கி தனது பயணத்தை கடந்த மாதம் (ஏப்ரல்) 24 திகதி மேற்கொண்டிருந்தது.

ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இப்பயிற்சி, இந்தோனேசிய கடற்படையினரின் ஏற்பாட்டில் லாம்போக் தீவில் மேற்கு நோஸா தென்காராவில் உள்ள லம்பார் துறைமுகத்தில் நடைபெற்றது.

பிராந்திய ஒருமைப்பாட்டுடன் அனர்த்தங்களை முகம்கொடுக்கும் வகையிலான ஒத்திகையாகவே இச் சர்வதேச கடற்படை மீளாய்வின் பிரதான நோக்கமாக காணப்படுகிறது.

8ஆம் திகதி இடம்பெற்ற இப்பயிற்சியின்போது சாகர மற்றும் இந்தோனேசிய கடற்படை கப்பல்கள் லம்பார் கடலில் தமது கடல் சார் பயிற்சிகளை முன்னெடுத்துள்ளன. இதன் போது இலங்கை கடற்படையினர் முதல் முறையாக ஒரேநேரத்தில் இரண்டு வெளிநாட்டு கப்பல்களில் மீள்நிரப்பும் பயிற்சியின் அனுபவத்தை பெற்றுள்ளனர். 9ஆம் திகதி இடம்பெற்ற தேடல் மற்றும் மீட்பு பயிற்சிகளின்போது சாகர பணிகளை நிறைவு செய்வதில் முதலாவதாக திகழ்ந்தது.

வடக்கு கடற்படை பிரிவின் தளபதி, ரியர் அட்மிரல் மெரில் விக்ரசிங்க, கெப்டன் (ஜி) அருண தென்னக்கோன் மற்றும் இந்தோனேசியாவின் இலங்கை பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் (ஜி) மஹிந்த மகாவிதனா ஆகியோர் இப்பயிற்சியில் கலந்து கொண்டிருந்தனர்.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்