››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

படையினரால் நாடளாவிய ரீதியில் போர் வீரர்கள் ஞாபகார்த்த தின நிகழ்வுகள் முன்னெடுப்பு`

படையினரால் நாடளாவிய ரீதியில் போர் வீரர்கள் ஞாபகார்த்த தின நிகழ்வுகள் முன்னெடுப்பு

[2018/05/21]

அண்மையில் (மே, 19) தேசிய போர் வீரர்களின் தினத்தை முன்னிட்டு ஞாபகார்த்த தின நிகழ்வுகள் பல இடம்பெற்றுள்ளன. இதன்பிரகாரம் நாடளாவிய ரீதியிலுள்ள பாதுகாப்பு தலைமையகங்கள், பயிற்சி கல்லூரிகள், படை பிரிவுகள், படை பராமரிப்பு நிலையங்கள், மற்றும் பிரிகேட் ஆகிய இடங்களில் மத அனுஷ்டானங்கள் உட்பட பல்வேறு நிகழ்வுகள் மே, 18ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில் இடம்பெற்றதாக
இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் சமய ஆசீர்வாத நிகழ்வுகள் அம்பாறை பிரதேசங்களில் இடம்பெற்றன. இதற்கமைய, பௌத்த சமய ஆசிர்வாத நிகழ்வுகள் மஹாவபிய விகாரையிலும், இந்து பூஜை நிகழ்வுகள் அம்பாறை கணபதி கோயிலும், முஸ்லீம் சமய நிகழ்வுகள் சம்மாந்துறை பள்ளிவாசலிலும், கிறிஸ்த்தவ நிகழ்வுகள் அம்பாறை புனித இக்னேசியஷ் கிறிஸ்த்தவ பள்ளியிலும் இடம்பெற்றன.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் 59, 64 மற்றும் 68 ஆவது படைப் பிரிவுகள் இணைந்து முல்லைத்தீவு பிரதேசங்களில் இந்த நினைவு தின நிகழ்வுகள் கொண்டாடப்பட்டன. முதலாவதாக முள்ளியாவளை ஜூம்மா பள்ளிவாசலிலும், புதுக்குடியிருப்பு குளந்தன கிறிஸ்த்தவ தேவாலயத்திலும், ஒட்டுசுட்டான் சிவன் கோயிலிலும் இடம்பெற்றதுடன், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக பங்களிப்புடன் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தினுள் பௌத்த போதிபூஜை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 57 ஆவது படைப் பிரிவின் தலைமையில் பொதுமக்களுடன் இணைந்து இந்த நினைவு தின நிகழ்வுகள் கிளிநொச்சி பிரதேசங்களிலும் இடம்பெற்றன.

முதலாவது இலங்கை சிங்க படைபிரிவின் 573 ஆவது பிரிக்கட் மற்றும் 57 ஆவது படைப் பிரிவினர் இணைந்து பரந்தன புனித அந்தோனியார் தேவாலயத்தில் 18 ஆம் திகதி கிறிஸ்த்தவ சமய ஆசீர்வாத நிகழ்வுகளும், 9 ஆவது விஜயபாகு காலாட் படையினர் மற்றும’ 571 ஆவது படைத் தலைமையகம் இணைந்து பாரதிபுரம் பெப்திஸ் கிறிஸ்த்தவ தேவாலயத்தில் 19 ஆம் திகதி சமய ஆசீர்வாத நிகழ்வுகளும் இடம்பெற்றன.

571 ஆவது படைத் தலைமையகம், 7 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, 16 ஆவது (தொண்டர்) இலேசாயுத காலாட் படையணியினரது பங்களிப்புடன் பௌத்த போதி பூஜை நிகழ்வுகள் கிளிநொச்சி லும்மினி விகாரையில்.

மேலும் 571 ஆவது படைத் தலைமையகம், 16 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியினர் இணைந்து சித்தி விநாயகர் கோயிலிலும், 574 ஆவது படைத் தலைமையகம் மற்றும் மூன்றாவது கஜபா படையணியினர் இணைந்து மாங்குளம் கணபதி கோயிலில் ஆசீர்வாத பூஜை நிகழ்வுகளை ஒழுங்கு செய்தனர்.

இந்நிகழ்வினை முன்னிட்டு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினாளும் விஷேட சமய ஆசிர்வாத நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தன.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்