››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

அனர்த்தங்களுக்கு உள்ளான மக்களுக்கு துரித நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு

அனர்த்தங்களுக்கு உள்ளான மக்களுக்கு துரித நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு

[2018/05/22]

சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்களுக்கு உள்ளாகியுள்ள சகல மக்களுக்கும் துரித நிவாரண உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உரிய துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்போது நிதி ஒதுக்கீடுகளை தடையாகக் கருதாது அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய சகல நிவாரண உதவிகள் தொடர்பாக துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் சீரற்ற காலநிலை காரணமாக விபத்துக்குள்ளாகியுள்ள பொதுமக்களுக்கான நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்பாக உரிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களிடம் தகவல்களை விசாரித்து அறிந்து கொண்டதன் பின்னரே ஜனாதிபதி அவர்கள் இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

மேலும், வெள்ளப்பெருக்கு காரணமாக விபத்துக்குள்ளானவர்களை மீட்பதற்கு முப்படையினரின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளவும் ஆலோசனை வழங்கியுள்ள ஜனாதிபதி அவர்கள், பொதுமக்களுக்கான நலன்புரி தேவைகளை பூர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உரிய துறையினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நன்றி : president.gov.lk



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்