››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முப்படையின் வெள்ள நிவாரண குழுக்கள் உதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முப்படையின் வெள்ள நிவாரண குழுக்கள் உதவி

அவசரகால நிலைமைகளை எதிர்கொள்வதற்காக 5800 முப்படை வீரர்கள் தயார் நிலையில்

[2018/05/22]

வெள்ள அனர்த்தத்தினால் பரவலாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டில் பல பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் 500 க்கும் மேற்பட்ட இராணுவ மற்றும் கடற்படை சிப்பாய்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் முன்னூற்றறுபதுக்கும் மேற்பட்ட இராணுவ சிப்பாய்கள் கொழும்பு, மாத்தறை, காலி, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கேகாலை பிரதேசங்களிளும் நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட கடற்படை சிப்பாய்கள் களுத்துறை, காலி , ரத்னபுர, மாத்தறை, கம்பஹா, புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய பிரதேசங்களிலும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் இன்றையதினம் (மே, 22) ஈடுபடுத்தப்பட்டனர்.

இதற்கு மேலதிகமாக சுமார் 5800ற்கு மேற்பட்ட முப்படை வீரர்கள், அனர்த்தம் நிகழும் என எதிர்பார்க்கக்கூடிய பகுதிகளில் அவசரகால நிலைமைகளை எதிர்கொள்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கென இராணுவத்தினரால் 13 டிங்கியிழைப் படகுகள், மூன்று WMZ கவச வாகனங்கள் என்பன ஈடுபடுத்தப்பட்டுள்ள அதேவேளை, கடற்படையினரால் 38 டிங்கியிழைப் படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் இலங்கை விமானப்படையின் பெல் 212, எம்ஐ 17 ஹெலிகாப்டர்கள் மற்றும் வை 12 மற்றும் பி 200 விமானங்கள் தரையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடும் விமான உதவி வழங்க காத்திருக்கின்றன.

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் ஏற்படும் அனர்த்த நிலைமைகள் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ மையம் மற்றும் ஏனைய அரச அதிகாரிகள் ஆகியோருடன் முப்படை வீரர்கள் நெருங்கிய ஒருங்கிணைப்புடன் செயல்பட்டுவருகின்றனர். சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் சுமார் 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பமாகியயுள்ளதன் மூலம் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக நாட்டில் கடுமையான மழைவீழ்ச்சி கிடைத்துவருகின்றது. வளிமண்டலவியல் திணைக்களங்களின் தகவல்களின்படி, நாட்டின் சில பகுதிகள் இன்று காலை 300 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சிகளை பெற்றுள்ளது. புத்தளம் மாவட்டத்தில் ஆனமடுவ பிரதேசத்தில் 353.8 மி.மீ. கடுமையான மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளது. கடுமையான மழை வீழ்ச்சிக்கு மத்தியில் அடிக்கடி மின்னல் தாக்கமும் ஏற்படுகின்றது.மேலும், மின்னல் தாக்கம் மற்றும் வெள்ளம் காரணமாக பல இறப்புச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் புள்ளிவிபரங்களின்படி எட்டு இறப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ள அதேவேளை, 17 மாவட்டங்களில் 9,817 குடும்பங்களைச் சேர்ந்த 38, 046 பேர் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 19 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ள அதேவேளை 918 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. நாடு முழுவதும் சுமார் 80 பாதுகாப்பான இடங்களில் இதுவரை 1600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்