››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பட்டமளிப்பு விழாவில் பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பிப்பு

பட்டமளிப்பு விழாவில் பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பிப்பு

[2018/06/07]

கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் கேற்போர் கூடத்தில் நேற்று (ஜூன், 06) இடம்பெற்ற லொஜிஸ்டிக்ஸ் பணியாளர் பயிற்சி நெறி - 4 இற்கான பட்டமளிப்பு விழாவில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்துள்ளார்.

இந் நிகழ்விற்கு பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. ஷாலினி வைத்தியரத்ன அவர்களும் வருகை தந்திருந்தார்.

இவ்விழாவின்போது, திருகோணமலை இராணுவ லொஜிஸ்டிக்ஸ் கல்லூரியியில் ஒரு வருட லொஜிஸ்டிக்ஸ் பணியாளர் பயிற்சிநெறியினை வெற்றிகரமாக நிறைவுசெய்த இரண்டு வெளிநாட்டு அதிகாரிகள் உட்பட 32 நடுத்தர இராணுவ அதிகாரிகளுக்கு, பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக ஆகியோரால் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இப்பயிற்சியில் “சிறந்த லொஜிஸ்டிக் திட்டமிடல்” மற்றும் சகலதுறையிலும் திறமைகளை காண்பித்த இருவருக்கு விருதுகளும் வழங்கிவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வெளிநாட்டு அதிதிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கை இராணுவத்தின் லொஜிஸ்டிக் இராணுவ கல்லூரியானது 2011ஆம் ஆண்டு மே 9ஆம் திகதி கிளப்பன்பேக் பகுதியில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். திருகோணமலை கிளபென்பேர்க் முகாம் இராணுவத்தின் நிர்வாகத் துறை மற்றும் சகல தர ஆயுதங்களும் பயிற்சியளிக்கப்படும் இராணுவத்தின் பிரதான பயிற்சி முகாமாக விளங்கிகிறது.

லொஜிஸ்டிக்ஸ் பணியாளர் பயிற்சி நெறியானது இலங்கை இராணுவத்தின் நடுத்தர அதிகாரிகளுக்கு நிர்வாகம் மற்றும் லொஜஸ்டிக் ஆகிய துறைகளில் வழங்கக்கூடிய உயர்தர தொழிற்பயிற்சி நெறியாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

     
     
     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்