››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

நிர்க்கதியான சோமாலிய மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு

நிர்க்கதியான சோமாலிய மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு

[2018/07/06]

கடற்பரப்பில் நிர்க்கதியான நிலைக்குள்ளாகியிருந்த மூன்று சோமாலிய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட தேடல் மற்றும் மீட்பு பணிமூலம் பாதுகாப்பாக கரைக்கு கொண்டுவரப்பட்டனர். சோமாலிய மீனவப்படகு காணாமல் போனதாக சோமாலிய மீன்பிடி மற்றும் கடற்தொழில் திணைக்களத்தினால் இலங்கை கடற்படையினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக குறித்த மீட்பு பணியில் கடற்படையினர் ஈடுபட்டனர்.

புதன்கிழமை மாலையில் மீட்பு பணிக்கான ஒரு மருத்துவக் குழுவினருடன் கடற்படை அதிகாரிகள் இலங்கை கடற்படைக்கப்பல் நந்தமித்ர குறித்த மீனவர்களை மீட்க்கும் நோக்குடன் விரைந்துசென்றது. எனினும் அடுத்த நாள் காலி கலங்கரை விளக்கிலிருந்து சுமார் 115 கடல் மைல் தொலைவில் நிர்கதிதியான நிலையில் தத்தளித்துக்கொண்டிருந்த இடத்தினை கடற்படையினர் கண்டுகொண்டனர். பாதிப்புக்குள்ளாகியிருந்த மீனவர்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகளை வழங்கப்பட்டு அவர்கள் காலி துறைமுகத்திற்கு பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டனர். பின்னர் அவர்கள் மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக காலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்