››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கதிர்காமத்திற்கான பாத யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிகர்களுக்கு படையினர் உதவி

கதிர்காமத்திற்கான பாத யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிகர்களுக்கு படையினர் உதவி

[2018/07/13]

வடக்கில் உள்ள யாழ்ப்பாணத்திலிருந்து தெற்கே உள்ள வருடாந்த கதிர்காமத்தை நோக்கிய வருடாந்த 'பாத யாத்திரை' ஆரம்பமாகியுள்ளது. இவ்வாண்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் யால தேசிய பூங்கா வழியாக கதிகாமத்திற்கான புனித யாத்திரையை மேற்கொள்கின்றனர்.

வருடாந்தம் இடம்பெறும் இப்பாத யாத்திரைக்கு நெடுந்தூரம் பயணிக்கும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்காக இலங்கை இராணுவம் பல்வேறு முன்னெடுப்பபுக்களை மேற்கொண்டுவருகிறது. மேலும் படையினரால் யாத்ரீகர்கள் பயணத்தின் போது இளைப்பாறி, ஒய்வுபெற்றுச் செல்வதற்கான விஷேட ஓய்விடங்களை பல அமைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் போத்தல்கள் என்பனவும் வழங்கப்படுகின்றன. அத்துடன் அவர்களின் பயணப்பாதையின் பல இடங்களில் யாத்ரீகர்கள் தமது தாகத்தை தீர்த்துக்கொள்ளும் வகையில் நீர்தாங்கிகள் பல நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

இதவேளை, இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்கள், யாத்ரீகர்களுக்கான நலன்புரி நடவடிக்கைகளை வழங்குவதற்காக பரண தோப்புபால, கடப்புலா அரா, லின் துனா மற்றும் பாலட்டுப்பன ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ள நலன்புரி மையங்களை மேற்பார்வையிட்டதுடன் அங்கு தரித்து நின்ற யாத்திரீகர்களுடனும் கலந்துரையாடினார். மேலும் இராணுவ தளபதி அவர்கள் தமது மதியபோசன உணவை யாத்திரீகர்களுடன் இணைந்து உட்கொண்டார்.

இதேபோல், இலங்கை கடற்படையும் பாத யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரீகர்களுக்கு உதவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக யாத்ரீகர்கள் நதிகள், ஆறுகள் மற்றும் நீர்வழிகளில் பாதுகாப்பக கடந்து செல்வதை உறுதிப்படுத்தும் வகையில் கடற்படை வீரர்களை அப்பிரதேசங்களில் நிலைநிறுத்தியுள்ளது.

ஆறுகள் மற்றும் காடுகளை கடந்து நெடுந்தூரம் பயணிக்க வேண்டிய இப்பாத யாத்திரை படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்நடவடிக்கைகள் மூலம் பாதுகாப்பு மிக்கதாகவும் இலகுவானானதாகவும் ஆக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்