››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவர் சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டார்

கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவர் சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டார்

[2018/07/21]


மீன் பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் கடுமையாக சுக்கையீனமுற்ற மீனவர் ஒருவர் வெள்ளிக்கிழமையன்று (ஜூலை,20) சிகிச்சைக்காக கரைக்கு கொண்டுவரப்பட்டார். இந்திய கடலோர பாதுகாப்பு படையினரின் உதவியுடன் இலங்கை கடற்படையினரால் குறித்த சுகயீனமுற்ற மீனவர் திருகோணமலை கடற்கரைப் பிரதேசத்திற்கு கொண்டுவரபட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்மீனவர் "நெளி துவ" மீன்பிடி படகில் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக திருகோணமலையிலிருந்து இம்மாதம் மூன்றாம் திகதி புறப்பட்டுச்சென்றிருந்தார். இவ்வேளையில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இம்மீனவரின் சுகயீனம் தொடர்பாக மீன்பிடி மற்றும் கடற்தொழில் திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பிரகாரம் இலங்கை கடற்படையினர் அதிவிரைவு தாக்குதல் படகின் மூலம் குறித்த நபரை தேடி விரைந்தனர்.

அதிவிரைவு தாக்குதல்தாக்குதல் படகினால் திருகோணமலையில் உள்ள ஃபவுல் பொயின்ட் கலங்கரை விளக்கிலிருந்து 160 கடல் மைல் தொலைவில் உள்ள சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் நிலைகொண்டிருந்த "நெலி துவா" மீன்பிடி படகு கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து மாற்றப்பட்டு திருகோணமலை கடற்படைத்தளத்திற்கு அதிவிரைவு தாக்குதல்தாக்குதல் படகின் மூலம் கொண்டுவரப்பட்ட மீனவர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை அரச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்