››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பலாங்கொடையில் காணாமல் போன சிறுவனை தேடும் பணியில் இராணுவத்தினர் இணைவ

பலாங்கொடையில் காணாமல் போன சிறுவனை தேடும் பணியில் இராணுவத்தினர் இணைவு

[2018/07/23]

பலாங்கொடையில் காணாமல் போன பத்து வயது சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள குழுவினருடன் இலங்கை இராணுவத்தினரும் இணைந்துள்ளனர். ஏற்கனவே தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் மற்றும் தான்னார்வ குழுக்கள் ஆகியவற்றுடன் இலங்கை இராணுவ வீரர்களும் இணைந்துள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வெள்ளிக்கிழமையன்று விறகு வெட்டச்சென்ற தனது தந்தையை தேடி அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்ற சிறுவனே காணாமல் போயுள்ளார். குறித்த சிறுவனை வனப்பகுதிக்குள் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோதும் அது வெற்றியளிக்கவில்லை.

இவ்வாறுள்ள நிலையில், பொலிஸ் அதிகாரிகள், கடந்த இரு நாட்களாக காணாமல் போயுள்ள சிறுவனை கண்டுபிடிப்பதற்காக இலங்கை இராணுவத்தின் உதவியினை நாடியுள்ளனர்.

இதற்காக மேற்கு பாதுகாப்புப்படை தலைமையகத்தின் கீழ் உள்ள சுமார் 50 இராணுவ வீரர்களை உள்ளடக்கிய மீட்புக்குழு தேடுதல் பணிகளுக்காக குறித்த பிரதேசத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்