››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

சிரமதான நிகழ்வுகளை முன்னெடுக்க இராணுவத்தினர் ஒத்துழைப்பு

சிரமதான நிகழ்வுகளை முன்னெடுக்க இராணுவத்தினர் ஒத்துழைப்பு

[2018/08/01]

அண்மையில் (ஜூலை, 26) சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் கிளிநொச்சி பிரதேசத்தில் மற்றுமொரு சிரமதான நிகழ்வுகளை இலங்கை இராணுவத்தினர் ஏற்பாடுசெய்திருந்தனர். இதன்பிரகாரம் தேவன்பிட்டி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை வளாகம் மற்றும் அக்கரையான் குளம் தளவைத்தியசாலை ஆகிய இடங்களில் சிரமதான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளின் ஒரு பகுதியாக இச்சமூக நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, பண்டாரவளை நகரப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள அழகிய பகுதிகளை உள்ளூராட்சி சபை ஊழியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் இணைந்து இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான திட்டங்கள் பொது இடங்களை சுத்தமாக பராமரிக்க உதவுவதோடு டெங்கு போன்ற ஆபத்தான நோய்கள் பரவுவதை கட்டுப்படுத்தவும் முடியும். மேலும் இவ்வாறான வேலைத்திட்டங்களின் ஊடாக பொது மக்களிடையே விழிப்புணர்வையும் அதிகரிக்க முடியும்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்