››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

'கியான் வீச்சங்' கப்பல் இலங்கை வருகை

'கியான் வீச்சங்' கப்பல் இலங்கை வருகை

[2018/08/08]

சீன கடற்படைக்குச் சொந்தமான 'கியான் வீச்சங்' எனும் கப்பல், நான்கு நாட்கள் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (ஆகஸ்ட், 08) இலங்கையை வந்தடைந்தது. கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த இக்கப்பலினை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றனர்.

129 மீட்டர் நீளம் மற்றும் 17மீட்டர் அகலத்தைக் கொண்ட இக்கப்பல், 158 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளையும் கொண்டுள்ளது. மேலும், எதிர் வரும் சனிக்கிழமை (ஆகஸ்ட்,11) நாட்டை விட்டு புறப்படவுள்ள இக் கப்பலின் கடற்படை சிப்பாய்கள், புறப்படுவதற்கு முன்னர் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்