››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

'கொழும்பு பாதுகாப்பு மாநாடு 2018' இற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

'கொழும்பு பாதுகாப்பு மாநாடு 2018' இற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

[2018/08/26]

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட்,30) நடைபெறவுள்ள 'கொழும்பு பாதுகாப்பு மாநாடு 2018' இற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. இரண்டு நாட்களைக் கொண்ட இச் சர்வதேச மாநாடு 'உலகளாவிய இடையூறுகளைக் கொண்டதொரு யுகத்தில் பாதுகாப்பு' எனும் தொனிப்பொருளில் இம்மாதம் 30ம் மற்றும் 31ம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாகவும் நடைபெறவுள்ள சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் 100 வெளிநாட்டு பிரதிநிதிகள் உட்பட 800 பாதுகாப்புத் துறைசார் பிரதிநிதிகள் பங்குகொள்ளவுள்ளனர். மேலும், 13 வெளிநாட்டு பேச்சாளர்களும் 14 உள்நாட்டு பேச்சாளர்களும் இங்கு உரையாற்றவுள்ளனர்.

இம்மாநாட்டில், 'மக்கள் தொகை மாற்றமும் பாதுகாப்பு மீதான தாக்கங்களும்', 'தொழில்நுட்ப இடையூறுகள்','மனித தலையீடு காரணமான காலநிலை மாற்றம்' மற்றும் 'அரசியல் தீவிரவாதம் ' ஆகிய தொனிப்பொருள்களுக்கு அமைவாக 'மனித காரணிகள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு', 'உள்நாட்டு இடப்பெயர்வின் உலகளாவிய சவால்', '21 ஆம் நூற்றாண்டில் நகர்ப்புற பாதுகாப்பு', 'இணைய முறண்பாடுகள் & எதிர்கால சக்தி', 'சமூக ஊடகங்களும் நம்பகத்தன்மையும்: உலகளாவிய பாதுகாப்பு சவால்கள்', 'செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியங்கி ஆயுதங்கள்', 'பிரதிபலிப்பு ; தணிப்பதற்கான உத்திகள் (பிராந்திய முன்னோக்கு) இராணுவத்தின் பங்கு', இராணுவம் தொடர்பான விழிப்புணர்ச்சி மற்றும் உத்திகள் (உலகளாவிய முன்னோக்கு) ',' காலநிலை பூகோள இயந்திரவியல்: சவால்கள் & வாய்ப்புகள் ',' வன்முறை அல்லாத அரசு விகிபாகம் ', ' காலநிலை மாற்றம்: போர் எதிர்கால 'மற்றும்' வன்முறை தீவிரத்தை குறைப்பதில் தலைமைத்துவம் ', ஆகிய தலைப்புகளில் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ள.

இவ்வாண்டு இடம்பெறவுள்ள இம்மாநாட்டில் ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பிரேசில், பங்களாதேஷ், போட்ஸ்வானா, சிலி, கனடா, எகிப்து, ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, ஈராக், இத்தாலி, கென்யா, கொரியா, மாலைத்தீவுகள், மொசாம்பிக், நெதர்லாந்து, நைஜீரியா, நைஜர், நோர்வே, நேபாளம், பிலிப்பைன்ஸ், ருவாண்டா, ரஷ்யா,சவுதி அரேபியா, செனகல், ஸ்பெயின், ஸ்வீடன், சூடான், தெற்கு சூடான், தான்சானியா, பிரித்தானியா, உக்ரைன், அமெரிக்கா, வியட்நாம், சாம்பியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் பங்கேற்கவுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்