››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ஹாட் டு ஹாட் நம்பிக்கை நிதியத்திற்கு இலங்கை விமானப்படையின் நன்கொடை

ஹாட் டு ஹாட் நம்பிக்கை நிதியத்திற்கு இலங்கை விமானப்படையின் நன்கொடை

[2018/08/28]

இலங்கை விமானப்படை ஹாட் டு ஹாட் நம்பிக்கை நிதியத்திற்கு ஒரு மில்லியன் ரூபாவினை நன்கொடையாக வழங்கியுள்ளது. குறித்த தொகைக்கான காசோலையினை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களால் நம்பிக்கை நிதியத்தின் இணை நிறுவுனர் வைத்தியர் ருவன் ஏக்கநாயக அவர்களிடம் திங்கட்கிழமையன்று (ஆகஸ்ட், 27) கையளிக்கப்பட்டதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹார்ட் டு ஹார்ட் நம்பிக்கை நிதியமனது 2014 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதுடன், இதன் மூலம் அவசர இருதய சத்திர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரச வைத்தியசாலைகளில் நீண்ட நாட்களாக இருதய சத்திர சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளுக்கு இந்நிதியத்தினால் உதவிகளும் வழங்கப்பட்டு வருவதுடன், இதுவரை 135 பேரின் இருதய சத்திர சிகிச்சைகளுக்கு உதவிகளும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்