››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு "செனெஹே சியபதா" மூலம் வீடுகள் வழங்கிவைப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு "செனெஹே சியபதா" மூலம் வீடுகள் வழங்கிவைப்பு

[2018/08/29]

"செனெஹே சியபதா" வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இருபத்தைந்து வீடுகள் பயனாளிகள் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எஹெலியகொடவில் இடம்பெற்ற "செனெஹேசே கம்மானயா" புதிய வீடுகள் திறப்புவிழா நிகழ்வில் கலந்துகொண்டு இவ்வீடுகளை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்த்தன அவர்கள் நேற்று (ஆகஸ்ட், 28) வழங்கியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சினது வழிகாட்டலின் கீழ் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் ஊடாக இருபத்தைந்து வீடுகளை எஹெலியகொட மின்னான பகுதியில் நிர்மாணித்துள்ளனர். இவ்வீட்டுதிட்டத்திட்கான நிதி உதவியினை டயலொக் எக்சிஎடா பீஎல்சீ வழங்கியுள்ளதுடன், வீட்டு நிர்மாணப்பணிகளை கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இங்கு இடம்பெற்ற நிகழ்வின்போது, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்த்தன அவர்களுடன் இணைந்து நீர்ப்பாசன மற்றும் நீர்வள அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்க அவர்களும் இப்புதிய வீட்டுத்திட்டத்தினை வைபபாரீதியாக திறந்துவைத்து, வீட்டினுடைய திறப்பினை பயனாளிகளிடம் கையளித்துள்ளனர்.

இங்கு உரைநிகழ்த்திய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அவர்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இவ்வீட்டுவசதியினை பெற்றுகொடுக்க உதவிய டயலொக் எக்சிஎடா பீஎல்சீ நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்தார். அத்துடன், அனர்த்த நிலைமைகளின் போது முப்படையினர் வழங்கிய ஒத்துழைப்புக்களை சுட்டிக்காட்டியதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க முதலில் முன்வருவதும் இவர்களே எனவும் குறிப்பிட்டார்.

இவ்வீடுகள் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் உட்பட சகல வசதிகளையும் கொண்டு தரநிலைகளுக்கு ஏற்ப நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், மகா சங்க உறுப்பினர்கள், அரச உயர் அதிகாரிகள், டயலொக் எக்சிஎடா பிரதிநிதிகள், முப்படை அதிகாரிகள், பயனாளிகள் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்