››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

8வது 'கொழும்பு பாதுகாப்பு மாநாடு' ஆரம்பம்

8வது 'கொழும்பு பாதுகாப்பு மாநாடு' ஆரம்பம்

[2018/08/30]

பிரதமர் கௌரவ. ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து சிரப்பிப்பு

இலங்கை இராணுவத்தின் வருடாந்த சர்வதேச பாதுகாப்பு மாநாடான 'கொழும்பு பாதுகாப்பு மாநாடு - 2018' பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (ஆகஸ்ட், 30) ஆரம்பமானது.

இன்று காலை ஆரம்பமான இம்மாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துசிரப்பித்த பிரதமர் கௌரவ. ரணில் விக்கிரமசிங்க அவர்கள், உள்ளநாட்டு மற்றும் வெளிநாட்டு பிரதிநிகள் மத்தியில் முக்கிய உரை ஒன்றையும் நிகழ்த்தினார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன ஆகியோரும் இம்மாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதம அதிதி அவர்கள் இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்களால் வரவேற்கப்பட்டு மாநாட்டு மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டு இலங்கையின் சம்பிரதாய முறைப்படி குத்துவிளக்கும் ஏற்றி வைக்கப்பட்டது.

இலங்கை இராணுவத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் சர்வதேச பாதுகாப்பு மாநாடான 'கொழும்பு பாதுகாப்பு மாநாடு 2018' இரண்டுநாட்கள் நடைபெற உள்ளதுடன், இச் சர்வதேச மாநாட்டில் 'உலகளாவிய இடையூறுகளைக் கொண்டதொரு யுகத்தில் பாதுகாப்பு' எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடல்கள் இடம்பெற உள்ளது.

இம்மாநாட்டின் ஆரம்ப அமர்வின்போது, கௌரவ. ருவாண்டா நாட்டின் பாதுகாப்பு அமைச்சர், ஜெனரல் ஜேம்ஸ் கெப்ரேபே, ஆளுநர்கள், ஜனாதிபதி செயலாளர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, விமானப்படைத் தளபதி, பொலிஸ் மாஅதிபர், வெளிநாட்டு இராஜதந்திரிகள், ஓய்வுபெற்ற முப்படை தளபதிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் விஷேட அழைப்பினை ஏற்று வருகைதந்த பலரும் கலந்துகொண்டனர்.

.

     
     
     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்