››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

'அன்கோரேஜ்' கடற்படைக்கப்பல் நாட்டை விட்டு புறப்பட்டது

'அன்கோரேஜ்' கடற்படைக்கப்பல் நாட்டை விட்டு புறப்பட்டது

[2018/08/31]

நல்லெண்ண விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த 'அன்கோரேஜ்' எனும் அமெரிக்க கடற்படைக்கப்பல் அண்மையில் நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது. இக்கப்பல் கடந்த 24ம் திகதியன்று நான்கு நாட்களைக் கொண்ட உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தந்திருந்தது.

குறித்த கப்பல் இலங்கையில் தங்கியிருந்த காலப்பகுதியில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல கூட்டுப்பயிற்சிகளில் பங்கெடுத்தாக இலங்கை கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டை விட்டு புறப்பட்ட இக்கப்பலுக்கு கடற்படை மரபுக்களுக்கமைய பிரியாவிடையளிக்கப்பட்டது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்