››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ரணவிரு முதியோர்கள் இல்லம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரால் கோலாகலமாக திறந்து வைப்பு

ரணவிரு முதியோர்கள் இல்லம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரால் கோலாகலமாக திறந்து வைப்பு

[2018/09/15]

அக்குரஸ்ஸ யகபெத்த பிரதேசத்தில் புதிதாக நிறுவப்பட்ட ரணவிரு சுரக்க்ஷ முதியோர்கள் இல்லம் மற்றும் வள நிலையம் ஆகியன பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களால் கோலாகலமாக நேற்று (செப்டம்பர், 14) திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்விற்கு வருகைதந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அவர்களை, ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவி திருமதி. அணோமா பொன்சேகா அவர்கள் வரவேற்றுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலின் கீழ் ரணவிரு சேவா அதிகாரசபையினால் நிறுவப்பட்ட இம்முதியோர்கள் இல்லமானது தகுதியுள்ள யுத்த வீரர்களை பராமரிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டதாகும். இவர்கள் தமது வயோதிப காலத்தின்போது இங்கு குறுகிய காலமோ அல்லது நிரந்தரமாகவோ தங்கி இருப்பதன் மூலம் தமது வாழ்கையை சிறந்த கவனிப்புக்களுடன் முன்னெடுத்துச்செல்லலாம். நன்கொடையாளி ஒருவரினால் நன்கொடையாக வழங்கப்பட்ட இவ்வீட்டினை இலங்கை இராணுவத்தினர் தேவையான புனரமைப்புக்களை செய்தபின்னர் இதனை இவர்களுக்காக வழங்கியுள்ளனர்.

இந்நிகழ்வில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு.சுனில் சமரவீர, முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், ரணவிரு சேவா அதிகாரசபையின் அதிகாரிகள், மற்றும் பிரதேசவாசிகள் பலரும் கலந்து கொண்டனர்.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்