››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை இராணுவத்தின் 69வது ஆண்டு தினம் இன்று

இலங்கை இராணுவத்தின் 69வது ஆண்டு தினம் இன்று

[2018/10/10]

இன்று, (ஒக்டோபர்.10) இலங்கை இராணுவத்தின் 69வது ஆண்டு நிறைவு தினம் ஆகும். 1949 ஆம் ஆண்டுகளில் 'சிலோன் இராணுவம்' என அறியப்பட்ட இலங்கை இராணுவம் 1972 ஆம் ஆண்டில் இலங்கை குடியரசாக மாறியபோது அது 'ஸ்ரீ லங்கா இராணுவம்' என மாற்றம் பெற்றது.

இலங்கை இராணுவம், நாட்டில் புரையோடிக் காணப்பட்ட பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதில் ஒரு முக்கிய பங்கை வகித்தது. 2009ஆம் ஆண்டு மே மாத காலப்பகுதியில் சமாதானமான யுகத்தை நாட்டினுள் ஏற்படுத்துவதற்காக இடம்பெற்ற இறுதிக்கட்ட மனிதாபிமான நடவடிக்கையின் பின்னர் இலங்கை இராணுவம், நல்லிணக்க செயற்பாடு மற்றும் தேசிய அபிவிருத்தி என்பவற்றை இலக்காக கொண்ட ஒரு புதிய பாணியில் பயணிக்க ஆரம்பித்தது.

தற்போது, இலங்கை இராணுவமானது, சமூக வீடமைப்பு நிர்மாணப்பணிகள், சமூக நலத் திட்டங்கள், நிவாரணப் பணிகள் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் இதர திட்டங்கள் ஆகியவற்றை மேற்கொண்டு வருகின்றது. மேலும், திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் வெல்லஸ்ஸ ஆகிய பிரதேசங்களில் காணப்பட்ட நூற்றுக்கணக்கான விவசாய நீர்ப்பாசன குளங்களை புதுப்பித்ததன் மூலம் நாட்டின் விவசாயத் துறையின் புத்துணர்ச்சிக்கும் வழிசமைத்தது.

இலங்கை இராணுவத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்பட்டுவரும் கொழுப்பு பாதுகாப்பு கருத்தரங்கு, நீர்க்காக களமுனை போர்பயிற்சி மற்றும் மித்ர சக்தி பயிற்சி உள்ளிட்ட இராணுவ பயிற்சிகள், இராணுவ - இராணுவ கருத்தாடல்கள் மற்றும் இதர இராணுவத்தினரிடையேயான பரிமாறல் திட்டங்கள் ஆகியன நாட்டிற்கான சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்துள்ளது. மேலும், இலங்கை இராணுவம், வெளிநாடுகளில் அமைதி காக்கும் பணியல் ஈடுபடும் ஐ. நா. அமைதி காக்கும் படைக்கும் தனது கணிசமான பங்களிப்பினை வழங்கிவருகின்றது.

இராணுவ தின வைபவங்கள் தொடரான பல மத நிகழ்வுகளுடன் ஆரம்பமாகின. இராணுவ கொடிகளுக்கு ஆசீர்வாதம் வாதம் வழங்கும் சர்வமத நிகழ்வுகள், கண்டி ஸ்ரீ தலதா மாளிகை, அனுராதபுர ஜய ஸ்ரீ மகா போதி, கொழும்பு மற்றும் நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்றது.

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, இராணுவத்தின் 69வது ஆண்டு தின உத்தியோக பூர்வ சம்பிரதாய அணிவகுப்பு நிகழ்வு இம்மாதம் 18ம் திகதி இடம்பெறவுள்ளது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்