››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

“கொழும்பு வான் ஆய்வரங்கு” இம்மாதம் ஆரம்பம்

“கொழும்பு வான் ஆய்வரங்கு” இம்மாதம் ஆரம்பம்

[2018/10/11]

இலங்கை விமானப்படையினரால் வருடாந்தம் ஏற்பாடுசெய்யப்படும் “கொழும்பு வான் ஆய்வரங்கு 2018” இம்மாதம் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் அத்திடிய ஈகிள்ஸ் லேக்ஸைட் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இவ்வருட ஆய்வரங்கு 'இலங்கையின் பூகோள -மூலோபாய முக்கியத்துவத்தை மேம்படுத்துவதில் வான்பல வியூகம்' எனும் தொனிப்பொருளில் இடம்பெரவுள்ளது.

“கொழும்பு வான் ஆய்வரங்கு 2018” தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இலங்கை விமானப்படைத் தலைமையகத்தில் நேற்றைய தினம் (ஒக்டோபர், 10) விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாகவும் இவ் ஆய்வரங்கு இலங்கை விமானப்படையினரால் ஏற்பாடு செய்யப்படுகின்றது.

இவ் ஆய்வரங்கு, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இராணுவ தலைவர்கள், தொழில் நிபுணர்கள், உலகளாவிய சிந்தனை சிற்பிகள் மற்றும் வல்லுனர்கள் ஆகியோர்களின் அறிவு, அனுபவம் மற்றும் தொழில் நிபுணத்துவம் ஆகியவற்றை பொதுவான ஒரு கருப்பொருளின் கீழ் பரிமாறிக்கொள்வதற்கான ஒரு தளத்தினை உருவாக்குகின்றது.

கடந்த வருடம் (2017) “வான்பலத்தின் மூலம் சமச்சீரற்ற சவால்களை எதிர்கொள்ளுதல்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற மூன்றாவது ஆய்வரங்கில் 17 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு பிரதிநிதிகள் உட்பட பெருமளவிலான பிரதிநிதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்க.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்