››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை விமானப்படையின் வான் ஆய்வரங்கு நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

இலங்கை விமானப்படையின் வான் ஆய்வரங்கு நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

[2018/10/18]

இலங்கை விமானப்படையின் நான்காவது “கொழும்பு வான் ஆய்வரங்கு” அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கலந்து சிறப்பித்தார். கொழும்பு, அத்திடிய ஈகிள்ஸ் லேக்ஸைட் மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை (ஒக்டோபர், 18) இடம்பெற்ற இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இலங்கை விமானப்படையின் ஏற்பாட்டில் இடம்பெறும் இவ்வாண்டுக்கான கொழும்பு வான் ஆய்வரங்கு 'இலங்கையின் பூகோள -மூலோபாய முக்கியத்துவத்தை மேம்படுத்துவதில் வான்பல வியூகம்' எனும் தொனிப்பொருளில் இடம்பெருகிறது.

இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ள இம்மாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மற்றும் ஏனைய அதிதிகளால் சம்பிரதாய பூர்வமான குத்துவிளக்கேற்றி ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இந்நிகழ்வினை நினைவு கூறும்வகையில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு நினைவுச் சின்னமொன்றும் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் சம்பத் அமரதுங்க அவர்களால் ஆரம்ப உரை நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில், பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா, பாதுகாப்பு படைகளின் பிரதானி, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, இராஜதந்திரிகள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் மற்றும் பெரும் திரளான உள்நாட்டு வெளிநாட்டு பங்கேற்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

     
     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்