››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை விமானப்படை புதிய பீடி-6 ரக பயிற்சி விமானங்களை பெறுகிறது

இலங்கை விமானப்படை புதிய பீடி-6 ரக பயிற்சி விமானங்களை பெறுகிறது

[2018/10/19]

இலங்கை விமானப்படை பொறியியல் பிரிவினால் மீளமைக்கப்பட்ட ஆறு பீடி-6 ரக புதிய பயிற்சி விமானங்களை உத்தியோகபூர்வமாக உள்வாங்கிய நிகழ்வு கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் செவ்வாயன்று (ஒக்டோபர், 17) இடம்பெற்றது.

விமானங்களை உள்வாங்கும் சம்பிரதாய பூர்வ நிகழ்வின்போது விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளும் பத்திரத்தில் கைச்சாத்திட்டதாக இலங்கை விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானப்படை தளபதி அவர்கள் சீன நஞ்சங் மாகாணத்தில் இவ்வாண்டு மே மாதம் 15ஆம் திகதி குறித்த விமானங்களை உள்வாங்குவது தொடர்பான பத்திரத்தில் கைச்சாத்திட்டிருந்தார்.

குறித்த விமானங்கள் இலங்கை விமானப்படையின் நிறமிடல் திட்டத்திற்கு அமைவாக வர்ணமிடப்பட்டதுடன் இலங்கை விமானப்படை பொறியியல் பிரிவினர் மற்றும் விமானிகளினால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. அத்துடன் விமானபடையில் இணைவதற்கான சகல தகுதிகளும் பரீட்சிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது.

இவ்விமானங்கள் திருகோணமலை சீனக்குடா இலங்கை விமானப்படை கலாபீடத்தில் முதற்கட்ட விமானப்பயிட்சிகளை பயில்வதற்காக பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் இவ்விமானங்கள் இலங்கை விமானப்படையின் வான் காட்சிப்படுத்தல் குழு உருவாக்கத்திற்கு முக்கிய பங்களிக்கவுள்ளது.

இந்நிகழ்வில், விமானப்படை அதிகாரிகளின் பிரதானி, எயார் வைஸ் மார்ஷல் சுமங்கள் டயஸ், இலங்கை விமானப்படை முகாமைத்துவ சபையின் மற்றும் சினாவின் எம்எஸ் சீஏடிஐசீ விமானப் பொறியியல் பிரிவின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்