››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவத்தினரால் முன்பள்ளிக்கட்டடம் நிர்மாணிப்பு

இராணுவத்தினரால் முன்பள்ளிக்கட்டிடம் நிர்மாணிப்பு

[2018/10/26]

மககச்சிகொடிய பிரதேசத்தில் நிர்மாணப்பணிகள் யாவும் நிறைவு செய்யப்பட்ட புதிய முன்பள்ளிக்கட்டிடம் ஒன்றினை வன்னிபிராந்தியத்திலுள்ள இலங்கை இராணுவத்தினர் கடந்தவாரம் (ஒக்டோபர்,20) திறந்து வைத்துள்ளனர். அரச மற்றும் தனியார் துறையினரின் உதவியுடன் இப்பிராந்திதியத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டதிற்கு அமைய நிர்மாணிக்கப்பட்ட முன்பள்ளிகளில் இது 6வதாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த பத்து மாதங்களில் இராணுவத்தினரால் வெற்றிகரமாக நிர்மாணிக்கப்பட்ட இவ்வாறான ஐந்து கட்டடங்கள் கிராமப்பகுதியில் பின்தங்கிய சமூகங்களுக்கு உதவும்வகையில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதுடன், இப்புதிய கட்டிடம் சுமார் 2.3 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், இங்கு விளையாட்டுமைதானம், சுகாதார வசதிகள், ஒரு மண்டபம் மற்றும் இதர வசதிகளும் காணபடுகின்றன. இதற்கான உதவிகளை தனியார் கொடையாளர்கள் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள், நன்கொடையாளர்கள், மற்றும் கிராம வாசிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்