››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கௌரவ. லக்ஷ்மன் செனவிரத்ன அவர்கள் புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவியேற்பு

கௌரவ. லக்ஷ்மன் செனவிரத்ன அவர்கள் புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவியேற்பு

[2018/11/05]

புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. லக்ஷ்மன் செனவிரத்ன அவர்கள் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற விஷேட வைபவத்தின் போது தமது கடமைகளை இன்று (நவம்பர், 05) பொறுப்பேற்றுக் கொண்டார்.

இங்கு இடம்பெற்ற சமய வழிபாடுகளுக்கு மத்தியில் மகா சங்க நாயக்கர்களின் ஆசீர்வாதத்துடன் உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டு இராஜாங்க அமைச்சர் அவர்கள் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந் நிகழ்வில், பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. சுனில் சமரவீர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மேலும், இம்மாதம் (நவம்பர், 01) முதலாம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பதவியேற்பு வைபவத்தின் போது இராஜாங்க அமைச்சர் செனவிரத்ன அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இந்நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்அவர்கள், நாட்டில் இறையாண்மையை பாதுகாக்கும் வகையில் சேவையாற்றும் முப்படையினர் மற்றும் காவல்துறையினர் ஆகியோருக்கு நன்றியை தெரிவிப்பதாகவும், மக்கள் மத்தியில் நல்லிணக்கம் மற்றும் நிலையான சமாதன நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் நாம் செயற்படவேண்டும் என்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் இதன்போது, நாட்டின் நலன்கருதி அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இந் நிகழ்வில் மத பிரமுகர்கள், அமைச்சரின் குடும்ப உறுப்பினர்கள், பாதுகாப்பு படைகளின் பிரதானி, முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்