››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கம்போடிய பிரதிநிதிகள் முகமாலை கண்ணி வெடி அகற்றல் தளத்திற்கு வருகை

கம்போடிய பிரதிநிதிகள் முகமாலை கண்ணி வெடி அகற்றல் தளத்திற்கு வருகை

[2018/11/08]

கம்போடிய கண்ணி வெடி அகற்றல் அதிகாரசபையின் (CMAA) 9 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு புதன்கிழமை (நவம்பர்,07) முகமாலை மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் இடத்திற்கு வருகை தந்தனர்.

கம்போடிய பிரதிநிதிகள் இலங்கையின் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணி மூலம் தங்கள் அறிவு விரிவாக்கும் நோக்கத்தில் இவ் விஜயத்தினை மேற்கொண்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஜயத்தின் போது,கம்போடிய கண்ணி வெடி அகற்றல் அதிகாரசபையின் செயலாளர் நாயகம் திரு. பிரம் சோபக்மொன்கோல் அவர்களின் தலைமையிலான குழுவினருக்கு, முகமாலையை அண்மித்துள்ள பாதுகாப்பற்ற பிரதேசங்களில் கண்ணி வெடி அகற்றல் நடவடிக்கை தொடர்பாக விரிவான விளக்கம் இராணுவத்தின் கண்ணிவெடியகற்றல் பிரிவினரால் வழங்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு கண்ணி வெடி அகற்றல் நடவடிக்கை தொடர்பான ஒத்திகை காட்சிகளும் காண்பிக்கப்பட்டது.அத்துடன் வருகை தந்த கம்போடிய பிரதிநிதிகள் நாட்டில் தங்கியிருக்கும் வேளையில் கொழும்புதேசிய கண்ணி வெடி அகற்றல் மத்திய நிலையத்தில் ஒரு முழு நாள் பயிற்சி செயலமர்வில் கலந்து கொள்லவுள்ளனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்