››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

போர் வீரர்கள் நினைவு தின நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பிப்பு

போர் வீரர்கள் நினைவு தின நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பிப்பு

[2018/11/11]

கொழும்பு விகார மஹா தேவி பூங்காவில் உள்ள போர் வீரர்கள் நினைவு மண்டபத்தில் இடம்பெற்ற போர் வீரர்கள் நினைவு தின மற்றும் பொப்பி மலர் அணிவிக்கும் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்கள் இன்று (நவம்பர், 11) கலந்து சிறப்பித்தார். வருடாந்தம் இடம்பெறும் இந் நிகழ்வினை இராணுவத்தின் முன்னாள் சேவையாளர் சங்கம் ஏற்பாடுசெய்திருந்தது.

இந் நிகழ்வின்போது, பாதுகாப்பு செயலாளர் அவர்களால் இராணுவத்தின் முன்னாள் சேவையாளர் சங்கத்தின் 15 அங்கத்தவர்களுக்கு அவர்களின் நலன்புரி சேவைககளை பாராட்டி விஷேட பதக்கங்களும் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும் இதன்போது, பாதுகாப்பு செயலாளர் திரு. பெர்னாண்டோ அவர்களுடன் இங்கு வருகைதந்த அதிதிகள் நினைவுத்தூபிக்கு மலர் வலயம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தாய் நாட்டை பாதுகாப்பதற்காக உயிர்த்தியாகம் செய்த போர் வீரர்களை நினைவு கூறும் வகையில் வருடாந்தம் இந்நிகழ்வு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

1921ம் ஆண்டு நவம்பர் மாதம் 07ம் திகதி படைவீரர்கள் நினைவகம் கொழும்பு காலிமுகத்திடலில் நிறுவப்பட்டபோதும், இது எதிரி உளவு விமானத்தை அணுகுவதற்கு ஒரு முக்கிய அடையாளமாக காணப்பட்டதால் பின்னர் அது அழிக்கப்பட்டு இரண்டாம் உலக மகா யுத்த காலப்பகுதியில் தற்போதைய இடத்தில் மீண்டும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பாதுகாப்பு படைகளின் பிரதானி, இராணுவ மற்றும் கடற்படை தளபதிகள், இராஜதந்திரிகள், இலங்கை முன்னாள் இராணுவ சேவையாளர் சங்கத்தின் அங்கத்தவர்கள், இராணுவ வீரர்கள், யுத்தத்தில் பங்கு பற்றி உயிர்த்தியாகம் செய்த படை வீரர்களின் குடும்ப அங்கத்தவர்கள் ஆகியோர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

     
     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்