››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவத்தின் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப கண்காட்சி மற்றும் கருத்தரங்கு இம்மாதம்

இராணுவத்தின் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப கண்காட்சி மற்றும் கருத்தரங்கு இம்மாதம்

[2018/11/14]

இலங்கை இராணுவத்தின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப கண்காட்சி மற்றும் சர்வதேச கருத்தரங்கு இம்மாதம் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வு இலங்கை இராணுவத்தின் சமிக்ஞைப் படைபிரிவினது 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெறவுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக் கண்காட்சியில் இராணுவத் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தனியார் துறையின் கண்டுபிடிப்பாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட நவீன மற்றும் அதிநவீன இலத்திரனியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் இராணுவத்தினரால் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இம்மாதம் 28ம் திகதி 'மின்வெளி; எதிர்காலத்திற்கான இடைக்கால போர்முனை' எனும் கருப்பொருளில் இடம்பெறவுள்ள இக்கருத்தரங்கில் , இந்தியா, சீனா, ரஷ்யா, பாக்கிஸ்தான் மற்றும் ஏனைய பல நாடுகளில் இருந்து வரகை தரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தகவல் தொழிநுட்ப நிபுணர்களின் பங்கேற்புடன் நடைபிவுள்ளது.

இந்நிகழ்வு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்களின் தலைமையில் நேற்றய தினம் (நவம்பர், 13) மதியம் ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்