››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் விஜயம்

இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் விஜயம்

[2018/11/16]

பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்கள் இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கு நேற்று (நவம்பர், 14) விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இதன்போது, பாதுகாப்புச் செயலாளர் அவர்கள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களால் மரியாதை செலுத்தி வரவேற்கப்பட்டார்.

இம்மாத ஆரம்பத்தில் புதிதாக பாதுகாப்பு செயலாளராக தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட செயலாளர் அவர்கள், இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கு தமது முதல் விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். இவ்விஜயத்தின்போது, பாதுகாப்பு செயலாளர் அவர்கள் விமானப்படை வளாகத் தொகுதியின் பல்வேறு துறைகளையும் பார்வையிட்டதுடன், இலங்கை விமானப்படையின் நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களையும் அறிந்துகொண்டார்.

இந்நிகழ்வில், இலங்கை விமானப்படையின் முகாமைத்துவ குழு உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்