››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

யாழில் இந்துமத குருமார்களுக்கு 'அக்ராஹரம்' வதிவிட அலகுகள் இராணுவத்தினரால் நிர்மாணிப்பு

யாழில் இந்துமத குருமார்களுக்கு 'அக்ராஹரம்' வதிவிட அலகுகள் இராணுவத்தினரால் நிர்மாணிப்பு

[2018/12/12]

இராணுவத்தினரால் இந்துமத குருமார்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட ஆறு 'அக்ராஹரம்' வதிவிட அலகுகள் அண்மையில் (டிசம்பர், 09) யாழ்ப்பாணம் காரைநகரில் இடம்பெற்ற நிகழ்வின்போது உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது. கோவில் குருமார்கள் மற்றும் உள்ளூராட்சி அதிகாரிகள் ஆகியோரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 'அக்ராஹரம்' என அழைக்கப்படும் இவ் இந்துமத குருமார்களுக்கான வதிவிட அலகுகள் நிர்மாணிக்கப்படதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த ஆறு 'அக்ராஹரம்' வதிவிட அலகுகளை நிர்மாணிப்பதற்கு தேவையான ஆளணி மற்றும் நிபுணத்துவம் என்பன யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக இராணுவத்தினர் வழங்கிய அதேவேளை, காரைநகர் பிரதேச செயலகம் நிர்மாணப்பணிகளுக்கான நிதியுதவியினை வழங்கியுள்ளது.

இவ் வீடுகளை வழங்கிவைக்கும் நிகழ்வில், மதத்தலைவர்கள், யாழ் பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி, அரச அதிகாரிகள் மற்றும் கோவில் பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்