››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவத்தினரால் 23773.62 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிப்பு

இராணுவத்தினரால் 23773.62 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிப்பு

[2018/12/18]

இலங்கை இராணுவத்தினர் ஜனாதிபதியவர்களின் வழிகாட்டலின் கீழ் வட கிழக்கில் தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டு பாவனைக்குற்படுத்தப்பட்ட 23773.62 ஏக்கர் தனியார் காணிகள் மே மாதம் 2009இல் இருந்து 31ஆம் திகதி டிசெம்பர் 2018ஆண்டு வரை மேற்படி காணிகளை விடுக்கப்பட்டல் வேண்டுமென ஜனாதிபதி காரியாலயத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கமைய இக் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் 23773.62 தனியார் காணிகள் அதன் உரிமையாளர்களுக்கு மே மாதம் 2009இல் இருந்து நவம்பர் மாதம் 2018ஆண்டு வரை விடுவிக்கப்பட்டு காணி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல தனியார் காணிகள் லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியாக 2016 முதல் மார்;ச் 2017 வரை காணப்பட்ட காலப்பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் வட கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகங்கள் வட கிழக்கில் காணப்படும் 45980.97 ஏக்கர் அரச காணிகளில் 23773.62 ஏக்கர் தனியார் காணிகளை விடுவித்துள்ளனர். மேலும் இராணுவமானது எதிர்காலத்தில் பாரிய காணிகளை விடுவிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

நன்றி:இலங்கை இராணுவம்



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்