››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இராணுவத்தினரால் மீட்பு

முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இராணுவத்தினரால் மீட்பு

[2018/12/26]

சீரற்ற காலநிலை காரணமாக பெய்துவரும் கடும் மழையினால் முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அவசர உதவிகளை வழங்குவதில் இலங்கை இராணுவத்தினர் துரிதமாக செயற்பட்டு வருகின்றனர். இதற்கேற்ப படையினர், பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்துதல், அவர்களுக்கு சமைத்த உணவு மற்றும் மருத்துவ உதவி வழங்குதல் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இம் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் 57 ஆவது படைப்பிரிவை சேர்ந்த சுமார் 230 படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கை கடற்படை தமது ஆறு நிவாரண குழுக்களை ஈடுபடுத்தி நிவாரண நாவடிக்கைகளுக்கு உதவிகளை வழங்கி வருகின்றது. இதற்கேற்ப இக்குழுக்கள், கிளிநொச்சி மாவடத்தில் கண்டவளை பிரதேச செயலகத்தில் பாதிப்புக்குள்ளான பகுதிகள் மற்றும் அலுவலக உபகரணங்களை அகற்றுவதற்கும் உதவிகளை வழங்கி வருகின்றன.

முல்லைதீவிலுள்ள இலங்கை இராணுவ வீரர்கள் இலங்கை கடற்படையினரின் உதவியுடன் இப்பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்களை மீட்டுள்ளனர்.

இதேநேரம், இலங்கை விமானப்படையினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானம் மூலம் வான் வழி கண்காணிப்புக்களை மேற்கொண்டு நிவாரண நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தரைப்படையினருக்கு உதவிகளையும் வழங்கிவருகின்றனர.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்