››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

வடக்கில் மற்றுமொரு தொகுதி காணிகள் விடுவிப்பு

வடக்கில் மற்றுமொரு தொகுதி காணிகள் விடுவிப்பு

[2018/12/20]

வட மாகாணத்தில் முன்னர் பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்பட்ட மற்றுமொரு தொகுதி நிலம் புதனன்று ( டிசம்பர்,19) விடுவிக்கப்பட்டது. கிளிநொச்சியில் கராச்சி, கண்டவலை, புதுக்குடியிருப்பு மற்றும் துணுக்காய் ஆகிய பகுதிகளில் இலங்கை இராணுவத்தினரால் பாதுகாப்பு காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்ட சுமார் 45.28 ஏக்கர் நிலமே இவ்வாறு விடுவிக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதற்கேற்ப , கராச்சி பிரதேச செயலக பிரிவில் 35.95 ஏக்கர் நிலப்பரப்பும், கந்தவலை பிரதேச செயலாளர் பிரிவில் 4 ஏக்கர் நிலப்பரப்பும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 05 ஏக்கர் நிலப்பரப்பும், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 0.33 ஏக்கர் நிலப்பரப்பும் அதன் உரிமையாளர்களுக்கு மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் உள்ள நல்லிணக்க மையத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது குறித்த காணிகளின் உத்தியோகபூர்வ ஆவணங்கள் அந்தந்த மாவட்ட செயலாளர்களிடம் கிளிநொச்சி பாதுகாப்புப் படை கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ரால்ப் நுகெர அவர்களினால் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்