››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

முல்லைத்தீவில் மற்றுமொரு தொகுதி காணி விடுவிப்பு

முல்லைத்தீவில் மற்றுமொரு தொகுதி காணி விடுவிப்பு

[2018/12/19]

முல்லைத்தீவில் முன்னர் பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்பட்ட மற்றுமொரு தொகுதி நிலம் செவ்வாய் கிழமையன்று ( டிசம்பர்,18) விடுவிக்கப்பட்டது. இராணுவத்தினரால் நேற்றையதினம் புனித பேதுரு தேவாலயத்தில் ஏற்பாடுசெய்யப்பட்ட கிறிஸ் கரோல் நிகழ்ச்சியின்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் 52.14 ஏக்கர் நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மாவட்ட செயலாளர் திருமதி ரூபாவதி கேதீஸ்வரன் அவர்களிடம் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கேற்ப, பொதுமக்களுக்கு சொந்தமான 33.05 ஏக்கர் தனியார் காணிகள், 11.59 ஏக்கர் அரச காணி மற்றும் வன வளத்துறைக்கு சொந்தமான 7.5 ஏக்கர் காணி ஆகியன படையினரால் நல்லெண்ணம் மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாக விடுவிக்கப்பட்டன. காணி விடுவிப்பு தொடர்பான ஆவணங்கள் முல்லைத்தீவு பாதுகாப்புப் படை கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களினால் மாவட்ட செயலாளரிடம் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்