››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

விமானப்படை 'வெதர் படி' தானியங்கி வானிலை நிலையங்களை நிறுவுகிறது

விமானப்படை 'வெதர் படி' தானியங்கி வானிலை நிலையங்களை நிறுவுகிறது

[2018/12/17]

இலங்கை விமானப்படை நாட்டினைச்சூழவுள்ள விமான நிலையங்களில் ஆறு (06) "வெதர் படி" வானிலை நிலையங்களை நிறுவியுள்ளது. "வெதர் படி" ஆனது இலங்கை விமானப்படையின் இரத்மலான படைத்தளத்தின் மின்னணு மற்றும் தொலைத் தொடர்பு பொறியியல் விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி ஆய்வகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு தானியங்கி வானிலை நிலையமாகும் என விமானப்படைத் தகவல்கள் தெரிவிக்கிறன.

இத் தானியங்கி வானிலை நிலையம், காற்றின் திசை, காற்றின்வேகம், வெப்பநிலை, அமுத்தம், ஈரப்பதன் மற்றும் மழை வீழ்ச்சி ஆகியவற்றை உணரக்கூடிய ஆறு உணரிகளை (sensors) உள்ளடக்கியுள்ளது . மேலும் இது வானிலை தரவுகளை வயர்கள் இன்றிய தொழில்நுட்பத்தின் மூலம் வானிலை தகவல்களை உடனுக்குடன் பரிமாற்றும் திறன் வாய்ந்தது. இணையதளம் அல்லது இணைய பயன்பாடு மூலம் உலகில் எங்கிருந்தும் வானிலை விவரங்களை அணுகுவதற்கு இணைய சேவையகத்தில் இவ்வாநிலை தரவுகள் பதிவேற்றப்படுகிறன. மீள மின்னேற்றக்கூடிய மின்கலம் மற்றும் சூரிய படலம் மூலம் இத்தொகுதி இயங்குகிறது. 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆராய்ச்சி குழு விருது இலங்கை விமானப்பயின் இக் கண்டுபிடிப்புக்கு வழங்கப்பட்டது.

இலங்கை விமானப்படையானது, இத் தானியங்கி வானிலை நிலையங்களை சீனக்குடா, அநுராதபுரம், ஹிங்குராங்கொட, பலாலி, கட்டுக்குருந்த மற்றும் வீரவில ஆகிய விமானப்படைத்தளங்களில் நிருவுயுள்ள அதேவேளை எதிர்வரும் காலங்களில் இதர தளங்களிலும் நிறுவுவதற்கு எதிர்பார்த்துள்ளது.

அண்ட்ரோய்டு மென்பொருள் மற்றும் இணையத்தளம் ஆகியவற்றை பின்வரும் இணைப்புகளைப் பயன்படுத்தி அணுக முடியும்.
 

அண்ட்ரோய்டு மென்பொருள்
http://203.115.24.232/app


இணையத்தளம்
http://203.115.24.232



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்