››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

படையினரின் வெள்ள நிவாரண பணிகள் தொடர்கின்றன

படையினரின் வெள்ள நிவாரண பணிகள் தொடர்கின்றன

[2018/12/27]

நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை அடுத்து குறிப்பாக வடக்கு பகுதிகளில் படையினர் வெள்ள நிவாரண பணிகள் தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றனர். முல்லைத்தீவு, புய்யாமுனை பகுதியில் மழை காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பொதுமக்கள் பலரை இலங்கை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். இதற்கமைவாக படையினரால் சனிக்கிழமையன்று (டிசம்பர், 22) பாதிக்கப்பட்ட ஐந்து பேரை காப்பாற்ற முடிந்ததாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், குறித்த பிரதேசங்களில் உள்ள குளங்களின் நீர் மட்டம் அதிகரிப்பதன் காரணமாக உடைப்பெடுக்கும் அபாயத்தை எதிர் நோக்கியுள்ள குளங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை படையினர் முன்னெடுத்து வருகின்றனர். இதற்கேற்ப அவர்கள் உடைப்பெடுக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள மரதமடுகுளத்தின் அணைக்கட்டினை பாதுகாக்க 1000 மண் மூட்டைகளை சுமார் 40 அடி தூரத்திற்கு மேல் அடுக்கி அப்பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடுமையான மழை மற்றும் அதனுடன் கூடிய காற்று ஆகியவை காரணமாக சாலைகள் பலவற்றில் மரங்கள் வீழ்ந்தததால் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீதி மற்றும் கட்டுவப்பிட்டி செபஸ்டியன் வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போக்குவரத்தை சீர்செய்யும் வகையில் வீதியில் வீழ்ந்து கிடந்த மரங்களை அகற்றும் பணிகளை படையினர் முன்னெடுத்தனர். மேலும் அவர்கள் அகருகமுள்ள பௌத்த விகாரை முன்றலில் வீழ்ந்து காணப்பட்ட மரங்கள் அகற்றும் பணிகளையும் முன்னெடுத்தனர்.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்