››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

அமெரிக்க கடற்படை கப்பல் “ரஷ்மோர்” கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

அமெரிக்க கடற்படை கப்பல் “ரஷ்மோர்“ நாட்டை விட்டு புறப்பட்டு சென்றுள்ளது

[2018/12/27]

இம்மாதம் (டிசம்பர்) 21ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்த அமெரிக்க கடற்படை கப்பலான “ரஷ்மோர்” நேற்று (டிசம்பர், 26) நாட்டை விட்டு புறப்பட்டு சென்றுள்ளது. ஆறு நாட்கள் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு வருகைதந்திருந்தது. குறித்த கப்பல் நாட்டை விட்டு புறப்பட்டுச் செல்லும்போது, இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கு அமைய பிரியாவிடை அளிக்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

185 மீட்டர் நீளம் கொண்ட இக்கப்பல் 380 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளையும் கொண்டுள்ளது. இலங்கையில் தரித்திருந்த வேளையில் இக்கப்பலிலுள்ள வீரர்கள் சில சுற்றுலா பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டதுடன், இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்றனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்